வேலன்-வேர்ட் ஆர்ட் செய்ய.

வழக்கமாக நாம் வார்த்தைகளை டிசைன் செய்ய வேர்ட்டை தான் தேர்வு செய்வோம். வேர்ட் அப்ளிகேஷன் இல்லாதவர்கள் டிசைன் செய்வது சற்று சிரமமே.வேர்ட்டில் செய்யும் டிசைன்வேலையை வேர்ட் இல்லாமலேயே நாம் தனியே செய்யலாம். அதற்கு Word Art Generator என்கின்ற இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது.2 எம்.பி.க்கும் குறைவான இந்த சாப்ட்வேரினை டவுண்லோடு செய்ய நீங்கள் இங்கு கிளிக்  https://inkpx.com/word-art-generatorசெய்யவு்ம்.

நீங்கள் இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும். அதில் மேலே உள்ள Text என்பதின் கீழ் உள்ள விண்டோவில் தேவையான டெக்ஸ்டை தட்டச்சு செய்யவும்.அதனைப்போலவே பாண்ட் என்பதில் உங்கள் கணிணியில் உள்ள எழுததுருவினை தேர்வு செய்யவும். எழுத்தின் அளவினையும் நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். அதற்கும் கீழே ஏழு சிறிய கட்டங்கள் உள்ளது. தேவையான கட்டத்தின் முன் டிக் அடையாளம் கொடுங்கள்.எழுத்தின் நிறத்தையும் பின்புற நிறத்தையும் தேர்வு செய்யவும்.Gradual என்பதில் டிக் செய்து எழுத்தின் நிறம் மாறுவதை காணலாம். ஆரம்ப நிறத்தையும் முடியும் நிறத்தையும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.Shadow வின் நிறத்தையும் தேர்வு செய்து இறுதியில் வார்த்தைகளை இமேஜாக சேமித்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதாங்க. இதனை நீங்கள் போட்டோஷாப் உட்பட எல்லாவித அப்ளிகேஷன்களிலும் உபயோகித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள வார்ததைகளை கவனியுங்கள்.


பயன்படுத்திப்பாருங்கள். கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

சிவகுமார் சுப்புராமன் said...

நன்றி வேலன்! எனக்கு Background எதுவும் இல்லாமல் எழுத்து மட்டும் வரவேண்டும்! அவ்வாறு design செய்ய எந்த மென்பொருளில் இயலும்!

மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி சார்

'பரிவை' சே.குமார் said...

puthiya menporul.
பகிர்வுக்கு நன்றி.

ADMIN said...

பயனுள்ள மென்பொருள்.. பகிர்வுக்கு நன்றி, மற்றும் வாழ்த்துக்கள்..!!

Anonymous said...

மிகவும் பயனுள்ள பதிவு...

Anonymous said...

மிகவும் பயனுள்ள பதிவு...

Related Posts Plugin for WordPress, Blogger...