வேலன்:-இணையதளம் சுற்ற வைக்க

சமீபத்தில் டாக்டர் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரு பேஷண்டை வீட்டில் சென்று அப்போதுதான் வந்திருந்தார். என்ன சார்-பேஷண்ட்டுக்கு பிரச்சனை என்றேன. பிரஷர் அதிகமாகிவிட்டது-அதனால் தலை சுற்றுகின்றது என்று கூறினார். என்ன செய்தீர்கள் என கேட்டேன்.மாத்திரை கொடுத்து இரவு முழுவதும் முதுகை பார்த்துக்கொண்டிருங்கள் சரியாகிவிடும் என்று கூறியதாக கூறினார். எனக்கு முதலில் ஓன்றும் புரியவில்லை. பிரஷருக்கும் முதுகை பார்த்துக்கொணடிருப்பதற்கும் என்ன சம்பந்தம் என கேட்டேன்.அவர்கள்தான் தலை சுற்றுகின்றது என்று கூறினார்களே அதனால் முதுகை பார்த்துக்கொண்டிருங்கள் என நகைச்சுவையாக கூறியதாக சொன்னார். சரி பதிவிற்கு வருவோம். நமது மானிட்டருக்கும் பிரஷர் வந்தால் என்ன ஆகும். இந்த வலைதளம் சென்று இங்கு கிளிக் செய்தீர்களே யானால் உங்கள் மானிட்டருக்கும் பிரஷர் வந்து சுற்ற ஆரம்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதில் உள்ள சர்ச் பாக்ஸில் நீங்கள் வேண்டிய தளத்தின் பெயரை தட்டச்சு செய்ய ஓப்பன் ஆகும் தளமும் சுற்ற ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட இதனை பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்...
வாழ்க வளமுடன;..
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்லா விளையாட்டு காட்டுகின்றீர்களே!

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

Admin said...

வித்தியாசமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி சார்!

அம்பாளடியாள் said...

அருமையான பகிவுக்கு வாழ்த்துக்கள் மிக்க நன்றி .....

chandru said...

போட்டோசாப் பாடங்கள் வருவதில்லையே,

வேலன். said...

ஆ.ஞானசேகரன் said...
நல்லா விளையாட்டு காட்டுகின்றீர்களே!

அன்புடன்
ஆ.ஞானசேகரன்
ஃஃ

நன்றி ஞானசேகரன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Abdul Basith said...
வித்தியாசமாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி சார்!
/

நன்றி அப்துல் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

அம்பாளடியாள் said...
அருமையான பகிவுக்கு வாழ்த்துக்கள் மிக்க நன்றி .....
ஃஃ

நன்றி சகோ...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

chandru said...
போட்டோசாப் பாடங்கள் வருவதில்லையே,
ஃஃ

நேரம் கிடைக்கவில்லை நண்பரே..விரைவில் பதிவிடுகின்றேன்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

Nicole Reed said...

ஆ.ஞானசேகரன் said... நல்லா விளையாட்டு காட்டுகின்றீர்களே! அன்புடன் ஆ.ஞானசேகரன் ஃஃ நன்றி ஞானசேகரன் சார்... வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...