வேலன்:-ரிங்டோனை எளிதில் நாமே உருவாக்க

சில பாடல்கள் கேட்க அருமையாக இருக்கும். நாம் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்களும் இருக்கும்.. சில பாடல்களில் இடையில் வரும் இசை நன்றாக இருக்கும். அதைப்போல சில பாடல்களில் இடையில் வரும் பாடல்வரிகள் அருமையாக இருக்கும். நாம் நமது தேவைக்கேற்ப பாடல்வரிகளை - இசையை -நமது செல்போனில் ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம். அவ்வாறு வைத்துக்கொள்ள நமக்கு ரிங்டோன் மேக்கர் தேவைப்படும். 2 எம.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.. இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். 
 தேவையான பாடலை நீங்கள் உங்கள் கம்யூட்டரில் இருந்துதேர்வு செய்யவும்..
 பாடலை ஒலிக்க விடுங்கள். தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள ஸ்லைடரை நகர்ததிவையுங்கள். மீண்டும் ஒரு முறை பாடலை ஒலிக்க விடுங்கள். சரியாக வருகின்றதா என பாருங்கள். அடுத்துள்ள Next அழுத்துங்கள்.
Save Ringtone to My Computer கிளிக் செய்து பாடலை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அங்கு சேமியுங்கள். 
உங்களுக்கு Processing நடைபெறும். மேலே உள்ள விண்டோவில் பாருங்கள். ரிங்டோன் தயாரானதும் அடுத்து நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்று பாருங்கள். நீங்கள் உருவாக்கிய ரிங்டோன் அங்கு இருக்கும்.. அதிலிருந்து உங்கள் செல்போனுக்கு ரிங்டோனை மாற்றிக்கொள்ளுங்கள; பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன்.
  
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

கணேஷ் said...

இளையராஜாவின் பல பாடல்களில் இடையில் வரும் இசைக் கோர்ப்பு மிக இனிமையாக இருக்கும். கட் செய்து வைத்துக் கொள்ள பயனுள்ள சாப்ட்வேர் தந்துள்ளீர்கள். உங்களுக்கு அந்த வழக்கமான வார்த்தை (நன்றி) உரித்தாகட்டும்!

Anonymous said...

பயனுள்ள பதிவு
நன்றி....

சே.குமார் said...

பயனுள்ள பதிவு
நன்றி.

வெட்டி ஆபிசர் said...

இவ்வளவு நாளா நான் பாடல்களை கட் செய்ய டோட்டல் வீடியோ கன்வர்ட்டரைதான். ஆனால் அதில் சவுண்டு குறைவாகத்தான் வரும். இதனால் புதியதாக ஓன்றை ரொம்ப நாளாக தேடிக்கொண்டு இருந்தேன். இந்நேரத்தில் இந்த பதிவை வெளியிட்டு எனக்கு உதவி செய்துள்ளீர்கள். உங்கள் உதவியைவை நிச்சயம் நான் மறக்க மாட்டேன். உதவிக்கு மிக்க நன்றி
இப்படிக்கு
வெட்டி ஆபிசர்.
தலைவர்
அகில உலக அல்வா நாயகி ரசிகர் மன்றம்.

மச்சவல்லவன் said...

நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.

மாணவன் said...

பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி சார்!

குடந்தை அன்புமணி said...

இந்த செய்தியை பதிவர் தென்றல் மாத இதழில் பயன்படுத்திக்கொள்ளலாமா? அனுமதி தேவை.thagavalmalar.blogspot.com

Kannan said...

பயன்னுள்ள தகவல்!.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

chandru said...

உங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து வருகிறேன்,இப்போழுது போட்டோசாப் பதிவுகள் போடுவதில்லையே, PSD போட்டோக்களை ஓரே லிங்காக மாற்றித் தந்து உதவுங்களேன்.
நன்றி

வேலன். said...

கணேஷ் said...
இளையராஜாவின் பல பாடல்களில் இடையில் வரும் இசைக் கோர்ப்பு மிக இனிமையாக இருக்கும். கட் செய்து வைத்துக் கொள்ள பயனுள்ள சாப்ட்வேர் தந்துள்ளீர்கள். உங்களுக்கு அந்த வழக்கமான வார்த்தை (நன்றி) உரித்தாகட்டும்!//

நன்றி கணேஷ் சார். நானும் இளையராஜா பாடல்களில் இடையில் வரும் இசைகளை கட்செய்துவைத்துள்ளேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

சின்ன தூறல் said...
பயனுள்ள பதிவு
நன்றி....

நன்றி நண்பரே..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
பயனுள்ள பதிவு
நன்றி.ஃ

நன்றி குமார் சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

வெட்டி ஆபிசர் said...
இவ்வளவு நாளா நான் பாடல்களை கட் செய்ய டோட்டல் வீடியோ கன்வர்ட்டரைதான். ஆனால் அதில் சவுண்டு குறைவாகத்தான் வரும். இதனால் புதியதாக ஓன்றை ரொம்ப நாளாக தேடிக்கொண்டு இருந்தேன். இந்நேரத்தில் இந்த பதிவை வெளியிட்டு எனக்கு உதவி செய்துள்ளீர்கள். உங்கள் உதவியைவை நிச்சயம் நான் மறக்க மாட்டேன். உதவிக்கு மிக்க நன்றி
இப்படிக்கு
வெட்டி ஆபிசர்.
தலைவர்
அகில உலக அல்வா நாயகி ரசிகர் மன்றம்.ஃஃ

நன்றி நண்பரே..வெட்டி ஆபிஸர் என்று சொல்கின்றீர்ககள்.ஆனால் உருப்படியான வேலை செய்துள்ளீர்கள்.தங்கள் வருகைக்கும் ககருத்துக்கும் நன்றி நண்பரே..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நல்ல பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி மச்சவல்லவன் சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
பயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி சார்!ஃஃ

நன்றி சிம்பு சார்..எங்கே கொஞ்சநாட்களாக உங்களை காணோம்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

குடந்தை அன்புமணி said...
இந்த செய்தியை பதிவர் தென்றல் மாத இதழில் பயன்படுத்திக்கொள்ளலாமா? அனுமதி தேவை.thagavalmalar.blogspot.comஃ

தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் நண்பரே..
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

Kannan said...
பயன்னுள்ள தகவல்!.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.comஃஃ

நன்றி கண்ணன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

chandru said...
உங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து வருகிறேன்,இப்போழுது போட்டோசாப் பதிவுகள் போடுவதில்லையே, PSD போட்டோக்களை ஓரே லிங்காக மாற்றித் தந்து உதவுங்களேன்.
நன்றிஃஃ

நேரமின்மையே காரணம்.விரைவில் பதிவிடுகின்றேன் சந்துரு சார்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...