மாநகராட்சி.நகராட்சி தவிர்த்து பஞ்சாயத்து.கிராம பஞ்சாயத்து.ஊராட்சி.பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடத்தின் சொத்துவரி.குடிநீர்வரி.தொழில்வரி போன்றவற்றை இணையம் மூலம் செலுத்தும் வசதியை தமிழகஅரசு செய்துள்ளது.இதன் மூலம் நாம் நம்முடைய வரியை சுலபமாக வீடடிலிருந்தே கட்டிவிடலாம். இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இடதுபுறம் உள்ள Online Tax Payment என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் முதன்முறையாக வரி செலுத்துபவர் எனில் புதியதாக கணக்கிணை ஆரம்பித்து உள்நுழையவும். இதில் உள்ள New Registration கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுடைய பெயர்.முகவரி.தொலைபேசி எண்.இமெயில் முகவரி.பாஸ்வேர்ட் முதலியவற்றை தட்டச்சு செய்து இதில் உள்ள சப்மிட் கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் தொலைபேசிக்கு பாஸ்வேரட் ஒன்று வரும். அதுபோல உங்கள இமெயில் முகவரிக்கும் பாஸ்வேரட் ஒன்று வரும் இரண்டையும் சேர்த்து நீங்கள் அவர்களின் இணையபக்கத்தில் உள் நுழையவும். பின்னர் ;;இதில் வலதுபுறம் Edit Profile.Change Password.Add Assiments.Payment Details.Payment History.Address Change.Log Out என நிறைய ஆப்ஷன்கள் கொடுத்திருப்பார்கள். மாற்றங்கள் எதும் செய்யவிரும்பினால் செய்துகொள்ளுங்கள். பின்னர் இதில் உள்ள வரிகள் சேர்ப்பு காலத்தினை கிளிக் செய்ய அதில் Property Tax.Water Changes.Profession Tax.Non Tax போன்ற டேப்புகள் கிடைக்கும் இதில் எது தேவையோ அதனை கிளிக் செய்யவும்.
நீங்கள் சொத்துவரிக்கான காலத்தினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் மாவட்டம்பெயரை தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்கள் பஞ்சாயத்து பெயரை தேர்வு செய்யுங்கள். அடுத்து உள்ள கட்டத்தில் உங்கள் வரி விதிப்பு எண்ணை தட்டச்சு செய்யுங்கள். (இந்த வரி விதிப்பு எண் உங்களுடைய பழைய ரசீதில் இருக்கும்)
உங்கள் தகவல்களை தட்டச்சு செய்து சர்ச் கொடுத்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உங்கள் மாவட்டம்.பஞ்சாயத்து பெயர்.சொத்துக்கு உரிமைஉள்ளவர் பெயர்.கதவிலக்கம் எண்.வார்ட் எண்.தெரு பெயர் என அனைத்து விவரங்களும் கிடைக்கும்.
விவரங்கள் சரியாக இருந்தால் இதில் உள்ள சப்மிட் கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதுபோல உங்களின் சொத்துவரி.குடிநீர் கட்டணம்.தொழில் வரி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். இப்போது மீண்டும் லாக்அவுட் செய்துவிட்டு பின்னர் லாக்ஆன் செய்து உள் நுழையவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுக்கு நீங்கள் பதிவு செய்த விவரங்கள் கிடைக்கும்.இதில் நீங்கள் வரி செலுத்து விரும்பினால் இதில் உள்ள கை அடையாளத்தினை கர்சர் கொண்டு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள் செலுத்தவேண்டிய வரி நிலுவைதொகை தெரியவரும்.இணைய வங்கி மூலம் பணம் செலுத்துங்கள்.
நீங்கள் வரி எதுவும் பாக்கியில்லையென்றால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு வரி ஏதும் பாக்கி யில்லை என்கின்ற தகவல் கிடைக்கும்.
இதன் மூலம் ஆறுமாதத்திற்கு ஓரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ உங்கள் சொத்துவரி.தொழில்வரி.குடிநீர் இணைப்பு வரிகளை சுலபமாக செலுத்திவிடலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
1 comments:
As reported by Stanford Medical, It's really the one and ONLY reason women in this country live 10 years more and weigh on average 42 pounds lighter than we do.
(And by the way, it has absolutely NOTHING to do with genetics or some secret exercise and EVERYTHING around "HOW" they are eating.)
BTW, I said "HOW", and not "what"...
CLICK this link to find out if this easy test can help you find out your true weight loss potential
Post a Comment