வேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -டிப்பேர்ட்.-TIPARD

டிவிடி வீடியோ பைல்கள்,யூடியூப் வீடியோக்கள்.இதர வீடியோ பைல்களை நாம் விரும்பும்படி மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.50 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் டிவிடி டிரைவிலிருந்து வீடியொ பைல்களை நாம் எடுக்கலாம். முதலில் அதற்கான டேப் கொடுத்துள்ளார்கள். அதனை அடுத்து கணிணியின் டிரைவிலிருந்து வீடியோ பைல்களை தேர்வு செய்வதற்கான டேப் கொடுத்துள்ளார்கள்.அடுத்துள்ள டவுண்லோடு ஆப்ஷனை கிளிக் செய்திட யூடியூப்பிலிருந்து உங்களுக்கான யூஆர்எல் முகவரியை காப்பி செய்திடவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நம்மிடம் உள்ள வீடியோவினை ப்ளே செய்து பார்க்கும் வசதியும் உள்ளது.
 இதில் உள்ள வீடியோ என்ஹான்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
 
 

இதில் ஆறுவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். ரோடேட்.3டி.எடிட்.வாட்டர்மார்க்.வீடியோ எபெக்ட். கிராப் என கொடுத்துள்ளார்கள். வீடியோவில் ப்ரைட்னஸ்.கான்ட்ராஸ்ட். மற்றும் சாட்டுரேஷன்.வால்யூம் என எதுவேண்டமானாலும் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.
 வாட்டர் மார்க்கில் டெக்ஸ்ட் அல்லது புகைப்படங்களை நாம் வாட்டர் மார்க்காக கொண்டுவரலாம். கீழேஉள்ள விண்டோவில் பாருங்கள்.
 வேண்டிய மாற்றங்கள் செய்தபின்னர் வேண்டிய பார்மெட்டுக்கும் வீடியோவினை நாம் மாற்றிக்ககொள்ளலாம் பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன் 
வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...