வேலன்:-புகைப்படங்களை மூவியாக மாற்ற

முன்னோட்டமாக ஒரு குறிப்பு:- கடந்த வாரம் திடீரென்று
மழை பெய்த போது இணைய இணைப்பில் மின்சார இணைப்பை
துண்டித்துவிட்டேன். ஆனால் டெலிபோன் லைனை எடுக்க
வில்லை. எங்கோ இடி தாக்க போன் ஒயர் மூலம் எனது மோடம்
செயல்இழந்துவிட்டது.(இதனால் நான் பெற்ற அனுபவம்:-
மழைபெய்யும்போது இணைய இணைப்பு,மின் இணைப்பு,
போன் இணைப்பு ஆகிய மூன்றையும் எடுத்துவிடவேண்டும்)
அதனால் என்னால் பதிவின் பக்கம் வரஇயலவி்ல்லை.
நான் பதிவிட வராததன் காரணத்தை போனிலும் நேரிலும்
இ-மெயிலிலும் விசாரித்த அன்பு உள்ளங்களுக்கு எனது
பணிவான நன்றிகள்.
அன்புடன்,

வேலன்.

போட்டோவில் அதிக எண்ணிக்கையில் பிரிண்ட் செய்வதை
சென்ற பதிவினில் பார்த்தோம். இன்றைய பதிவில் நம்மிடம்
உள்ள் போட்டோக்களை எப்படி பிலிமாக மாற்றுவது (முவி பைலாக)
மாற்றுவது என பார்க்கலாம். இதைப் பற்றி நான் ஏற்கனவே
விண்டோ மூவி மேக்கரில் எப்படி செய்வது என பதிவிட்டுள்ளேன்.
விணடோமூவி மேக்கரில் பார்க்க விரும்புபவர்கள் இங்கு
கிளிக் செய்து பார்க்கவும்.ஆனால் இந்த சாப்ட்வேரில் போட்டோக்களை
மூவியாக மாற்றுவது அதைவிட சுலபமாக உள்ளது. இந்த சாப்ட்வேர்
மூலம் எப்படி போட்டோக்களை மூவியாக மாற்றுவது என பார்க்கலாம்.

முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்குகிளிக்
செய்யவும்.நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Add Files கிளிக் செய்து உங்கள் டிரைவில் உள்ள
புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.

இப்போது உங்கள் புகைப்படங்கள் இதில் உள்ள விண்டோவில்
வரிசையாக வரும். மேலே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் உள்ள Jump to கிளிக் செய்ய உங்களுக்கு தேவையான
படத்திலிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். அடுத்துள்ள
Organize கிளிக் செய்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.இதில் உள்ள புகைப்படத்தை நீங்கள்
வேண்டிய இடத்தில் மாற்றி அமைக்கலாம். இல்லை
கலந்தவாறு வரவேண்டும் என்றால் இதில் உள்ள
Shuffle கிளிக் செய்ய அதுவே மாறிவிடும்.கீழே உள்ள
புகைப்படத்தை பாருங்கள்.

இதில் உள்ள SoundTrack -ல் நமது விருப்ப பாடலை தேர்வு
செய்ய Browse கிளிக் செய்து உங்கள் டிரைவில் உள்ள
விருப்பமான பாடலை தேர்வு செய்யுங்கள்.

அதேப்போல் உங்கள் விருப்பமான Resulation என்ன தேவையோ
அதை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

இப்போது அடுத்தபக்கத்தில் பாருங்கள். இதில் உள்ள ஆடியோ
செட்டிங் தேர்வு செய்யுங்கள்.ஆடியோவினை தேர்வு
செய்யும் சமயம் அதன் ஒலிஅளவையும் கவனமாக
தேர்வு செய்யுங்கள். அப்போதுதான் ரிசல்ட் நன்றாக வரும்.
அடுத்து இந்த பைலை எங்குசேமிக்க விரும்புகின்றீர்களோ
அந்த இடத்தை தேர்வு செய்து Go கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இப்போது பணி முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.

இதில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யுங்கள்.
அவ்வளதுதான் உங்கள் புகைப்படங்கள் மூவி படமாக மாறி
விட்டது.இனி இதை சிடியில் காப்பி செய்து சிடிபிளேயர்
மறறும் டிவிடி பிளேயரில் கண்டுகளிக்கலாம்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய டிசைன்:-
இன்றைய டிசைன் காண லிங்க்கை பதிவிறக்கம் செய்ய இங்கு.
கிளிக் செய்யவும்இதுவரையில் புகைப்படத்தை பிலிமாக மாற்றியவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

r.selvakkumar said...

உபயோகமான தகவல். கலக்கறீங்க!

gulf-tamilan said...

உபயோகமான தகவல். thanks !!!

வேலன். said...

r.selvakkumar கூறியது...
உபயோகமான தகவல். கலக்கறீங்க//

நன்றிசார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

gulf-tamilan கூறியது...
உபயோகமான தகவல். thanks !ஃஃ

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Thomas Ruban said...

உபயோகமான பதிவுக்கு நன்றி சார்..

கக்கு - மாணிக்கம் said...

இது போன்ற ஒரு soft ware மிகவும் பயன்படக்கூடியது.பகிர்ந்தமைக்கு நன்றிகள் மாஸ்டர் வேலன்.

Prem said...

I installed and created a video, the audio part is good the picture quality is not good for all the resolution. I tried with 58 photos at a time,may be that could be a reason as well.

But it is very easy to use to use.

Regards,
Prem Anand

வேலன். said...

Thomas Ruban கூறியது...
உபயோகமான பதிவுக்கு நன்றி சார்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
இது போன்ற ஒரு soft ware மிகவும் பயன்படக்கூடியது.பகிர்ந்தமைக்கு நன்றிகள் மாஸ்டர் வேலன்ஃஃ

நன்றி சார்....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Prem கூறியது...
I installed and created a video, the audio part is good the picture quality is not good for all the resolution. I tried with 58 photos at a time,may be that could be a reason as well.

But it is very easy to use to use.

Regards,
Prem Anandஃஃ

புகைப்படங்களையும் தனித்தனியே ரெசுலேசன் மாற்றி பின்னர் பயன்படுத்திப்பாருங்கள்.நன்றாக வரும்.5 புகைப்படம் மட்டும் மாதிரிக்கு செய்து பாருங்கள். சரியாக வந்தபின் அனைத்தையும் ்மாற்றுங்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

அன்பு said...

பயனுள்ள தகவல். தொடரட்டும் தங்கள் பணி.. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
எஸ்.அன்பு.

2009kr said...

useful information. Thanks
நண்பரே, video விலிருக்கும் ஒரு சாட் (shot) jpge பைல் ஆக மாற்றுவது எப்படி என்று சொல்லிகுடுங்களேன். நன்றி

Malu said...

Superb!!!

வேலன். said...

அன்பு கூறியது...
பயனுள்ள தகவல். தொடரட்டும் தங்கள் பணி.. வாழ்த்துக்கள்.

அன்புடன்,
எஸ்.அன்பு//

நன்றி அன்பு அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

2009kr கூறியது...
useful information. Thanks
நண்பரே, video விலிருக்கும் ஒரு சாட் (shot) jpge பைல் ஆக மாற்றுவது எப்படி என்று சொல்லிகுடுங்களேன். நன்றி//

தங்களின் விருப்பத்தை 08-10-2009 பதிவில் நிறைவேற்றுகின்றேன் நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
Superb!!!

நன்றி மாலு அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

அன்புராஜா said...

உங்களின் சேவை எங்களுக்கு மிகவும் பயன்படுக்கிறது மிக்க நன்றி

ஸ்பார்க் ஆர்ட்ஸ் said...

attakaasamaan & ubayogamaana padhivu

Related Posts Plugin for WordPress, Blogger...