

போட்டோஷாப்பில் இன்று பேட்டர்ன் Pattern பற்றி பார்க்கலாம்.
ஒரு புகைப்படத்தைப்போல் நமக்கு நிறைய புகைப்படங்கள்
தேவை. அதை பேட்டர்ன் மூலம் நாம் சுலபமாக கொண்டு வரலாம்.
பேட்டர்ன்கள் வெவ்வேறு இடங்களில் நமக்கு உபயோகப்படும்.
முன்பு இதே பேட்டர்ன் பற்றி மார்க்யு டூல் மூலம் பார்த்தோம்.
இன்று கிராப் டூல் மூலம் பேட்டர்ன் கொண்டு அதன் ஒரு
உபயோகத்தை மட்டும் இப்போது பார்க்கலாம்.
உங்கள் தேவையான படத்தை போட்டோஷாப்பில் திறந்து
கொள்ளுங்கள். நான் இந்த குருவிப்படத்தை திறந்து உள்ளேன்.
முந்தையப்பாடத்தில் நாம் கிராப் டூல் மூலம் குருவியின் முகம்
மட்டும் தேர்வு செய்துகொண்டுள்ளேன். இதன் அகலம் 3 அங்குலமும்
உயரம் 2 அங்குலமும் ரெசுலேசன் 96 எனவும் வைத்துள்ளேன்.

Enter கொடுத்துள்ளேன். கீழே உள்ள படம் தேர்வானது.

இப்போது இதை Pattern ஆக மாற்றவேண்டும். அதை எப்படி என
இப்போது பார்க்கலாம். நீங்கள் Edit கிளிக் செய்து அதில் Define Pattern
தேர்வு செய்யுங்கள்.

இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

பேட்டனுக்கு வேண்டிய பெயரினை கொடுங்கள். அடுத்து ஓ.கே.
கொடுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த படம் பேட்டனில்
சேர்ந்து உள்ளது.சரி இப்போது பேட்டனை எப்படி உபயோகிப்பது.
அதை பார்க்கலாம்.
இப்போது புதிய பைலை திறக்கவும். நான் 3x2 அங்குலம் அளவில்
படத்தை தேர்வுசெய்துள்ளதால் 9x8 அங்குல அளவில் பைலை
திறந்துள்ளேன். இப்போது மீண்டும் Edit கிளிக் செய்து அதில் உள்ள
Fill கிளிக் செய்யவும்.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஒப்பன் ஆகும்.

இதில் நீங்கள் தேர்வுசெய்த படத்தை கிளிக் செய்யவும். பின் ஓ.கே.
கொடுக்கவும்.

இப்போது பாருங்கள் உங்கள் படம் அதிக எண்ணிக்கையில்
வந்துள்ளதை காண்பீர்கள்.ஆனால் போட்டோஷாப்
உதவியில்லாமல் இதே டூலை உபயோகிப்பது பற்றி அடுத்து
பதிவிடுகின்றேன்.
இன்றைய டிசைனில் கீழ்கண்ட PSD பைலை இணைத்துள்ளேன்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நண்பர் Jaikanth அனுப்பிய புகைப்படம்.அவருக்கு நன்றிகள் பல
7 comments:
வழக்கம் போலவே 'மாஸ்டர்' வேலன் சார் வகுப்பு பிரமாதமாக போகிறது. நம்ம மாப்ளையின் பங்களிப்பும் இதில் வருவது மகிழ்ச்சியான ஒன்று.
பகிவுக்கு நன்றிகள் 'மாஸ்டர்'
அன்புடன்
கக்கு
கக்கு - மாணிக்கம் கூறியது...
வழக்கம் போலவே 'மாஸ்டர்' வேலன் சார் வகுப்பு பிரமாதமாக போகிறது. நம்ம மாப்ளையின் பங்களிப்பும் இதில் வருவது மகிழ்ச்சியான ஒன்று.
பகிவுக்கு நன்றிகள் 'மாஸ்டர்'
அன்புடன்
கக்கு//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...நானோ சிறுவன். எதற்கு எனக்கு மாஸ்டர் பட்டம் எல்லாம்.நான் கற்றுக்கொள்ளவேண்டியது எவ்வளவோ உள்ளது....
வாழ்க வளமுடன்,
வேலன்.
//நான் கற்றுக்கொள்ளவேண்டியது எவ்வளவோ உள்ளது....//
உங்கள் அடக்கம் உங்களை காப்பாற்றும்.
shirdi.saidasan@gmail.com கூறியது...
//நான் கற்றுக்கொள்ளவேண்டியது எவ்வளவோ உள்ளது....//
உங்கள் அடக்கம் உங்களை காப்பாற்றும்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் shirdi.saidasan...
அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Interesting. Thank you.
Malu கூறியது...
Interesting. Thank you.//
நன்றி நணபரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
உங்களை நான் வணங்கிறேன் ஐயா
muthuvelu54@gmail.com
என்றும் அன்புடன் உங்கள் முத்துவேல்
Post a Comment