விண்டோவின் உயிர் நாடி டாக்ஸ்க்பார் ஆகும். ஸ்டார்ட் மெனு
முதல் கொண்டு கடிகாரம் வரை நாம் உபயோகிக்கும் அனைத்து
அப்ளிகேஷன்களும் இதில் அமைத்துக்கொள்ளலாம். எடுத்து உபயோகிக்க
எளிதானது. இந்த டாஸ்க்பாரையே நாம் விரும்பியபடி எப்படி
அமைத்துக்கொள்ளலாம் என இப்போது பார்க்கலாம்.
முக்கியமான அப்ளிகேஷன்கள் மட்டும் நாம் டாஸ்க்பாரில்
ஐகான்கள் உருவாக்கி இருப்போம். தேவையான இதர
அப்ளிகேஷன்களை பெற ஸ்டார்மெனுவையே நாம் கிளிக்
செய்வோம். நாம் அப்ளிகேஷன்கள் திறக்க திறக்க டாஸ்க்பாரில்
இடப்பற்றாக்குறையால் அப்ளிகேஷன்களின் பெயர் முழுமையாக
நமக்கு தெரியாது. ஆனால் இதில் உள்ள பைல்கள் அனைத்தையும்
குருப் செய்துவிட்டால் அந்த குருப்பில் உள்ள பைல்கள் அனைத்தும்
வரிசையாக அமைந்துவிடும். முதலில் குருப் அப்ளிகேஷன்
எப்படி எடுத்து வருவது என பார்க்கலாம்.
இப்போது நான் நிறைய ஆபிஸ் விண்டோ அப்ளிகேஷன்களையும்
எக்ஸல் அப்ளிகேஷனையும் மேலும் சில அப்ளிகேஷன்களையும்
திறந்துள்ளேன். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது இதை குருப் அப்ளிகேஷனாக மாற்றவேண்டும்.
நீங்கள் டாஸ்க்பாரில் வைத்து மவுஸை கிளிக் செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ப்ராபர்டீஸ் கிளிக் செய்யவும். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Group Similar taskbar buttons எதிரில் உள்ள பட்டனை கிளிக்
செய்து Apply அழுத்திய பின் Ok கொடுங்கள்.
இப்போது பாருங்கள் . அனைத்து அப்ளிகேஷன்களும்
ஒரே குருப்பில் அமைந்துவிடும் . கீழே உள்ள படத்தை பாருங்கள்.
நாம் குருப்பில் மாற்றிய பின்னும் அப்ளிகேஷன்கள் அதிகம் இருந்தால்
கர்சரை டாஸ்க்பாரின் ஓரம் கொண்டு செல்லுங்கள். உங்கள் மவுஸ்
கர்சரானது அம்பு குறியாக மாறிவிடும். அதை மேல் நோக்கி இழுக்க
உங்களுக்கு டாக்ஸ்க்பாரானது அகலமாக மாறுவதை காணலாம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
சரி இப்போது வேறு யாரவது உங்கள் டாஸ்க்பாரின் செட்டிங்கை
மாற்றினால் என்ன செய்வது. மீண்டும் டாஸ்க்பாரில் மவுஸ் வைத்து
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒப்பன் ஆகும் விண்டோவில்
உள்ள Lock the Taskbar கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
சரி இப்போது உங்களுக்கு டாஸ்க்பாரே தெரியவேண்டாம் என
நினைக்கின்றீர்களா. அதையும் மறைத்து விடலாம். கர்சரை
கீழ் புறம் கொண்ட செல்லும் சமயம் மட்டும் உங்களுக்கு அது
தெரியும். சரி டாஸ்க் பாரை எப்படி மறைய வைப்பது?
மீண்டும் ப்ராபர்டீஸ் தேர்ந்தெடுங்கள்.
இதில் உள்ள Auto hide the taskbar கிளிக் செய்யுங்கள்.
அப்ளை - ஓகே கொடுங்கள். இப்போது பாருங்கள் உங்களுக்கு
டாஸ்க்பார் காணாமல் போய் இருக்கும்.
அதைப்போல் இணைய இணைப்பு வைத்துள்ளவர்கள் இணையத்தில்
ஏதாவது தகவலை பெற அனைத்து அப்ளிகேஷனையும் மூடிவிட்டு
செல்லவேண்டும் . ஆனால் அதை தவிர்க்க குயிக் லாஞ்ச் அமைத்து
விட்டால் உடனடியாக இணைப்பை பெறலாம். அதற்கு
முன்பு போல் ப்ராபர்டீஸ் ஓப்பன் செய்து Show Quick Launch எதிரில்
உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பதிவினை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஒட்டுப்
போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
டாஸ்க்பாரை நாம் விருப்பிய படிஇதுவரை மாற்றியவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
10 comments:
உபயோகமான பதிவு
உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) கூறியது...
உபயோகமான பதிவு
உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பயனுள்ள தகவல் வேலன் சார்...வெளியிட்டமைக்கு நன்றி
Useful posting.
Useful posting.
நித்தியானந்தம் கூறியது...
பயனுள்ள தகவல் வேலன் சார்...வெளியிட்டமைக்கு நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Malu கூறியது...
Useful posting.ஃஃ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
அருமையாக தமிழில். கூகிளில் தேடுபவர்களுக்கு மிகவும் உதவும். :)
ஊர்சுற்றி கூறியது...
அருமையாக தமிழில். கூகிளில் தேடுபவர்களுக்கு மிகவும் உதவும். ://
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....
வாழ்க வளமுடன்,
வேலன்.
வணக்கம்.
கடந்த பத்து நாட்களுக்கு முன் என் சிஸ்டெம் ( விண்டோஸ் vista ) பழுதடைந்து விட்டது. அதனால் ரிஇன்ஸ்டால் செய்யவேண்டியதாகி விட்டது. அப்பொழுது, என்னுடைய எல்லா கோப்புகளும் அழிந்து விட்டது.
இழந்த கோப்புகளை நான் மீண்டும் பெற முடியுமா?
ஆனந்த்
பமாகோ,mali
dnithyanandan@gmail.com
Post a Comment