வேலன்:-ஓரே சமயத்தில் பல பைல்களில் திருத்தம் செய்ய

<span title=
நம்மிடம் ஆபிஸ் பைல்கள் இருக்கும். அதில் ஓரு பைலில் உள்ள
தகவலை அடுத்த பைலுக்கு சென்றுபார்த்து திருத்தம் செய்ய வேண்டும்.
நாம் என்ன செய்வோம். முதல் பைலை திறந்து வேண்டிய வார்த்தை
களை தேர்வு செய்து அடுத்த பைலை திறந்து அதில் சேர்ப்போம்.
ஆனால் ஓன்றுக்கும் மேற்பட்ட பைல்களை திறந்து கொண்டு
மாற்றங்கள் செய்யலாம். இந்த மாற்றத்தை நாம் ஆபிஸ் 2003-ல்
எப்படி செய்வது என பார்க்கலாம்.
முதலில் நீங்கள் ஆபிஸ் 2003 -ல் பைலை திறந்து கொள்ளுங்கள்.
(FIle/Open கிளிக் செய்தோ Ctrl+O மூலமோ தேர்வு செய்யலாம் ).
மாற்றம் செய்யவேண்டிய மற்றும் ஓரு பைலையும் திறந்து கொள்
ளுங்கள். முதலில் திறந்த ஆபிஸ் பைலில் Toolbar-ல் உள்ள Window
கிளிக் செய்தபின் வரும்Arrange all என்பதை தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.


இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்துவைத்துள்ள
பைல்கள் இரண்டு தேர்வாகி இருப்பதை காணலாம். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.

உங்கள் விருப்பப்படி பைலில் மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு படுக்கை வாட்டத்தில் வேண்டுமானாலும் வைத்துக்
கொள்ளலாம். அல்லது அருகருகே நெடுக்கு வாசத்தில் வேண்டும்
ஆனாலும் வைத்துக் கொள்ளலாம். நெடுக்கை வாட்டத்தில்
வேண்டும் எனில் அதில் உள்ள Compare side by side கிளிக்
செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்தபின் நீங்கள்
ஒவ்வொரு பைலையும் மூடிவிடுங்கள். முதலில் உள்ள
பைலைமட்டும் வைத்துக்கொண்டு Window பட்டனை கிளிக்
செய்து Arrange All கிளிக் செய்தால் பைல்லானது முழுவதுமாக
தெரியும்.

ஓன்றுக்கு மேற்பட்ட பைல்களை திறந்து கொள்ளலாம். ஆனால்
இரண்டுக்கு மேல் விண்டோவில் திறந்தால் பணிபுரிவது சிரமமாக
இருக்கும். அதனால் இரண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம்.

பதிவை பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

உங்களுக்கு தெரியுமா? வரும் 09.09.09 தேதி அன்று காலை
09.09.09 மணிக்கு வரும் நேரம் அடுத்த தலைமுறைக்கு தான்
மீண்டும் வரும்.(எனது இணைய நண்பரின் திருமண நாளும்
அன்றுதான்.அவருக்கு என்சார்பாகவும் உங்கள் சார்பாகவும்
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்)

ஓரே சமயத்தில் பல பைல்களில் திருத்தம் இதுவரை
திருத்தம் செய்தவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

நித்தியானந்தம் said...

நல்ல தகவல் திரு.வேலன்...பகிர்ந்தமைக்கு நன்றி...நான் கருத்துரையிடுகையில் நீங்கள் நல்ல நித்திரையில் இருப்பீர்கள் என்பது எனக்கும் தெரியும் நண்பரே...காரணம் நான் பிரான்ஸ் நேரப்படி 8 மணிக்கு மேல் தான் வந்து உங்கள் படைப்புகளை பார்வையிடுவேன். அதிலிருந்து + 4.30 நேரம் உங்களுக்கு முன்னோக்கி....

வேலன் சார் உங்களிடம் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருந்தேன் தாங்கள் இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை...

உங்களுக்கு ஒரு "News letter" அனுப்பவேண்டும் வேலன்....

ஓட்டளித்துவிட்டேன் நன்றி

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
நல்ல தகவல் திரு.வேலன்...பகிர்ந்தமைக்கு நன்றி...நான் கருத்துரையிடுகையில் நீங்கள் நல்ல நித்திரையில் இருப்பீர்கள் என்பது எனக்கும் தெரியும் நண்பரே...காரணம் நான் பிரான்ஸ் நேரப்படி 8 மணிக்கு மேல் தான் வந்து உங்கள் படைப்புகளை பார்வையிடுவேன். அதிலிருந்து + 4.30 நேரம் உங்களுக்கு முன்னோக்கி....

வேலன் சார் உங்களிடம் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருந்தேன் தாங்கள் இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை...

உங்களுக்கு ஒரு "News letter" அனுப்பவேண்டும் வேலன்....

ஓட்டளித்துவிட்டேன் நன்றி//

மெயில் அனுப்பி விட்டேன் நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

senthil said...

i m 09.09.99 +2 account stuntent

velan said...

senthil கூறியது...
i m 09.09.99 +2 account stuntent

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில்....

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

//எனது இணைய நண்பரின் திருமண நாளும்
அன்றுதான்.//

உய் ...உய் ....உய் ...உய் ..
மச்சி,,, மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
//எனது இணைய நண்பரின் திருமண நாளும்
அன்றுதான்.//

உய் ...உய் ....உய் ...உய் ..
மச்சி,,, மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...