வேலன்:-போட்டோஷாப் பாடம் 31(Magic Wand Tool -தொடர்ச்சி)


போட்டோஷாப் பாடத்தில் சென்ற வாரம்Magic Wand Tool
பற்றி பார்த்தோம்.அதன் தொடர்ச்சியை இந்த வாரம்
பார்க்கலாம். நான்சாதாரணமாக இந்த புகைப்படத்தை
எடுத்துள்ளேன்.



இந்த பெண்ணின் பின் புறம் ஒரு ஏரியோ ஆறோ உள்ளது.
அதில்தூரத்தில் படகும் செல்வதை காணுங்கள். இப்போது
(Magic Wand Tool ) டூல் கொண்டு
இந்த தண்ணீரை கிளிக் செய்து டெலிட் அழுத்தியதும்
உங்கள் பின்புற கலர் நிறத்துடன்(நான் Backround Color
வெள்ளைநிறம் வைத்துள்ளேன்) படம் இந்த மாதிரி தேர்வாகும்.


இப்போது Layer-New Fill Layer - Pattern என
கீழ்கண்டவாறு தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் நீங்கள் Pattern ஆக எந்த படம் வைத்துள்ளீர்களோ
அதை தேர்வு செய்யுங்கள்.புகைப்படத்தை Pattern ஆக
மாற்றுவதை முன்பு பாடத்தில் பதிவிட்டுள்ளேன்.
தேவைப்படுபவர்கள் இங்கு கிளிக்
செய்துமுந்தைய பாடத்தை பார்த்துக்கொள்ளவும்.


நான் இந்த அருவியை Pattern ஆக தேர்வு செய்துள்ளேன்.



இப்போது உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும். இதில் உள்ள
ஸ்லைடரை நகர்த்துவது மூலம் நீங்கள் படத்தை ஒழுங்கு
செய்துகொள்ளலாம்.அல்லது மூவ் டூல் கொண்டு படத்தை
வேண்டிய இடத்தில் நகர்த்திக்கொள்ளலாம்.


இப்போது அந்த பெண்ணின் பின்உள்ள ஆறு ஆனது
அழகிய அருவியின் பின்புலமாக மாறுவதை காணலாம்.

ஸ்லைடரை ஒழுங்காக நகர்த்தியபின்வந்த படம்
கீழே:-

மற்றும் ஒரு அருவியின் பின்புலத்தில் கொண்டுவந்த படம்
கீழே:-

அவ்வளவுதாங்க. ரொம்ப சிம்பிளாக இருக்கு இல்ல...நீங்களும்
உங்களுடைய புகைப்படத்தை பின் புறம் உள்ள நிறத்தை
நீக்கி விட்டு வேண்டிய படத்தை வைத்துக்கொள்ளுஙகள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.
இதன் தொடர்ச்சி அடுத்த போட்டோஷாப் பதிவில்.

வாழ்க வளமுடன்.


வேலன்.



JUST FOR JOLLY PHOTOS:-

ஷேம் ஷேம் பப்பி ஷேம்....


இன்றைய பதிவிற்கான PSD புகைப்படம் கீழே:-


டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-



இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.



போட்டோஷாப்பில் இதுவரை புகைப்படம் மாற்றியவர்கள்:-
web counter


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

Thomas Ruban said...

உங்களுடைய விரிவான விளக்கமான பதிவுக்கு நன்றி சார்.

Dr.Rudhran said...

thank you for all these posts

Anonymous said...

பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
உங்களுடைய விரிவான விளக்கமான பதிவுக்கு நன்றி சார்//

நன்றி நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Dr.Rudhran கூறியது...
thank you for all these posts//


டாக்டர் அவர்களுக்கு்,
தங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன். தாங்கள் எனது பதிவிற்கு வந்து கருத்துகூறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்//

நன்றி நண்பர் மஜித் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

sakthi said...

உங்களுடைய கருத்துக்கு நன்றி நண்பரே.. நன் அதனை சரி பார்க்கின்றேன்.. அனால் மற்ற பக்கங்களில் அந்த தவறு நிகழ்ந்து இருப்பதாக தெரியவில்லை.. இருப்பினும் அதனை சற்று சரி பார்த்து தெரிவிக்கவும்.. மிக்க நன்றி...

sakthi said...

i got another blog of mine for your review..

sivakumar said...

enakku photo brightness sharpness seiya oru menporul vendum

sivakumar said...

enakku photo brightness sharpness seiya oru menporul vendum

Related Posts Plugin for WordPress, Blogger...