வேலன்:- ஒரே சாப்ட்வேரில் எட்டு வெவ்வேறு பணிகள்.

கதை,திரைக்கதை,வசனம்,நடிப்பு,பாடல்கள்,இசை,டைரக்ஷன்,
தயாரிப்பு என இருப்பவரை அஷ்டாவாதினி என்பார்கள்.அதைப்
போல் இந்த சாப்ட்வேரை சாப்ட்வேர்களில் அஷ்டாவாதினி
 எனலாம். நான் பதிவிடும் சிறந்த சாப்ட்வேர்களில் இதுவும் 
சேரும் என எண்ணுகின்றேன். இதை பதிவிறக்க இங்கு கிளிக்
செய்யவும்.
இந்த சாப்ட்வேர் மூலம் நாம் ஆடியோ -வீடியோ பிளேயராக இதை உபயோகிக்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் நமது கம்யூட்டரில் உள்ள பைலை ஒப்பன் மூலம் 
தேர்ந்தேடுக்கவும். பின்னர் பிளே அழுத்தி படம் பார்க்கலாம்.
 இதில் உள்ள படத்தை ஓடும் சமயம் ப்ரேம் ஸ்டெப் 
பயன்படுத்தி ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம். Change Ratio
 மூலம் வேண்டிய அளவிற்கு படத்தை பெரிதாக சிறியதாக மாற்றிக்கொள்ளலாம்.
அடுத்துள்ளது Audio/Video Cutter.கீழே உள்ள விண்டோவினை
 பாருங்கள். 
 இதன் மூலம் ஆடியோ பைல்களையும்-வீடியோ
 பைல்களையும் வேண்டிய அளவிற்கு கட் செய்து 
வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றி வேண்டிய இடத்தில்
 சேமித்துக்கொள்ளலாம்.
அடுத்துள்ளது ஆடியோ கன்வர்ட்டர் . கீழே உள்ள
 விண்டோவினை பாருங்கள்.
இதன்மூலம் உங்களது ஆடியோ பைல்களை இதன்
 மூலம் ஓப்பன் செய்து அதை Mp3.wav.aac.wma.flac.M4a.ac3
 என வேண்டிய பார்மெட்டுக்களுக்கு மாற்றி வேண்டிய
 இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.
இதைப்போலவே வீடியோ கன்வர்ட்டர். இதன் மூலமும்
 வேண்டிய பார்மெட்டுக்கு வீடியோவை சுலபமா
 மாற்றிக்கொள்ளலாம்.
அடுத்துள்ளது போட்டோ கட்டர். 
உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படத்தை திறந்து
 கொண்டு அதை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்
கொள்வதோடு அல்லாமல் வேண்டிய அளவிலும் அதை கட்
 செய்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் இதில 100
 புகைப்படங்களின் அளவையும் பார்மெட்டையும் மாற்றிக்கொள்ளலாம்.வேண்டிய அளவினை கொண்டுவர
 இதில் உள்ள Custom Ratio என்பதனை கிளிக் செய்யவேண்டும்.
 கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து இதில் உள்ள போட்டோ ரீ -சைஸரும் நமக்கு
 வேண்டிய அளவிற்கு புகைப்படஙகள் மாற்ற உதவுகின்றது:. 
அடுத்துள்ளது Slide Show. இது நம்மிடம் உள்ள புகைப்படங்களை
 ஸ்லைட் ஷோவாக மாற்றிக்கொள்வதோடு அல்லாமல்
 அதில பின்னணி இசையையும் சேர்க்கலாம். படம்
 மாறும் நேரத்தையும செட் செய்யலாம்.கீழே உள்ள
 விண்டோவினை பாருங்கள்.
கடைசியாக இன்டர்நேட் டூல்ஸ். இதை கிளிக்செய்வதன்
 மூலம் இணையத்தில  ் நாம் பார்க்கும் டெக்ஸ்ட்டை
 தேர்வு செய்து அதை படிக்க செய்யலாம்.கீழே உள்ள
 விண்டோவினை பாருங்கள்.
      
தேவையான அளவிற்கு விளக்கியுள்ளேன்.பதிவினை
 பாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள். பதிவின் நீளம 
கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். 
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST OF JOLLY PHOTOS:-
இதனால் சகபதிவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நம்
சக பதிவருக்கு மே மாதம் 13 ந்  தேதி பிறந்த நாள் வருகின்றது.
 365 நாட்களில்,  "நான்" பிறந்தேன் என்று சொல்லி பெருமைப்பட்டு 
கொள்ள கொடுத்து வைத்த நாள் என அவர் சொல்கின்றார்.
எனவே சக பதிவர்களே-நண்பர்களே-நீங்கள் மே மாதம் 13 ந்
  தேதி அன்று(.இன்னும் ஒரு நாள் கூட இல்லை) தோரணம்
 கட்ட மறக்காதீங்க. மைக் செட், பாட்டு கச்சேரி, பட்டாசு,
 தங்க செயின், ஆயிரம் ரூபாய் நோட்டு மாலை எல்லாம்
 ஆர்டர் செய்துவிடுங்கள்.மறக்காமல் வாழ்த்தலாம் வாங்
(http://vazthalamvanga.blogspot.com/)  பதிவிற்கு வந்து வாழ்த்து
சொல்லிவிட்டுபோங்க.வருகைதந்து 
வாழ்த்துபவர்கள் எல்லோருக்கும் அறுசுவையுடன்விருந்து
 அவரவர் வீட்டிலேயே செய்து 
சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.  

இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

27 comments:

மாணவன் said...

வேலன் சார்,

வழக்கம்போல அசத்தல் பதிவு

மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருளை
பதிவுட்டுள்ளிர்கள் ...

ரொம்ப நன்றி சார்..

Chitra said...

இதனால் சகபதிவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நம்
சக பதிவருக்கு மே மாதம் 13 ந் தேதி பிறந்த நாள் வருகின்றது.
365 நாட்களில், "நான்" பிறந்தேன் என்று சொல்லி பெருமைப்பட்டு
கொள்ள கொடுத்து வைத்த நாள் என அவர் சொல்கின்றார்.
எனவே சக பதிவர்களே-நண்பர்களே-நீங்கள் மே மாதம் 13 ந்
தேதி அன்று(.இன்னும் ஒரு நாள் கூட இல்லை) தோரணம்
கட்ட மறக்காதீங்க. மைக் செட், பாட்டு கச்சேரி, பட்டாசு,
தங்க செயின், ஆயிரம் ரூபாய் நோட்டு மாலை எல்லாம்
ஆர்டர் செய்துவிடுங்கள்.மறக்காமல் வாழ்த்தலாம் வாங்க
(http://vazthalamvanga.blogspot.com/) பதிவிற்கு வந்து வாழ்த்து
சொல்லிவிட்டுபோங்க.வருகைதந்து
வாழ்த்துபவர்கள் எல்லோருக்கும் அறுசுவையுடன்விருந்து
அவரவர் வீட்டிலேயே செய்து
சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.

...."தம்பட்டம் தாயம்மா" வை விட இந்த "தம்பட்டம் தங்கையா" ஸ்டைல் நல்லா இருக்குது. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

ISR Selvakumar said...

பயனுள்ள மென்பொருள் மற்றும் சகபதிவரின் பிறந்தநாள் அறிமுகம் !
வாழ்த்துகள்!

S Maharajan said...

வழக்கம்போல அசத்தல் பதிவு வேலன் சார்,

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையான பதிவு நண்பரே..

mahaboob said...

நல்ல சாப்ட்வேர் பதிவிடுகிறிர் ஆனால் எல்லாம் ரிஜிஇஸ்டர் கி கேட்கிறது
தயவுசெய்து இலவமான சாப்ட்வேர் பதிவிடவும் பதிவிற்கு வாழ்த்துக்கள்

movithan said...

பயன் உள்ள மென்பொருள்

சத்ரியன் said...

வேலன் சார்,

உண்மையில் மிகமிகப் பயனுள்ள பதிவு.

மிக்க நன்றி.

பொன் மாலை பொழுது said...

// இந்த சாப்ட்வேரை சாப்ட்வேர்களில் அஷ்டாவாதினி
எனலாம். நான் பதிவிடும் சிறந்த சாப்ட்வேர்களில் இதுவும்
சேரும் என எண்ணுகின்றேன் //
வேலன்

சரிதான் மாப்ள, பிரமாதமாத்தான் இருக்கு. இந்த மாதிரி ஒன்று இருக்கு என்பதை
நோண்டி,துருவி, கடைந்த சலித்து ,புடைத்து கடைசியில் அழகாக, எப்படி பயன் படுத்துவது
என்ற விளக்கமும் கொடுத்து.......................ரொம்ம ரொம்ம நல்ல ,சாத்வீகமான ,தங்கமான
மனசு வேணும் மாப்பு இப்படி ஒரு பதிவு போட.
"தங்கமனசு கார மாப்ஸ் மாஸ்டர் வேலன் வாழ்க வழக.

Menaga Sathia said...

நல்ல பகிர்வு!!

மச்சவல்லவன் said...

வணக்கம் வேலன்சார். அருமையான பல பயனுள்ள மென்பொருள் அறிமுகம் செய்துள்ளீர்கள்.

...நன்றி சார்...

'பரிவை' சே.குமார் said...

வேலன் சார்,

வழக்கம்போல அசத்தல் பதிவு

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

வழக்கம்போல அசத்தல் பதிவு

மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருளை
பதிவுட்டுள்ளிர்கள் ...

ரொம்ப நன்றி சார்..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்....வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
இதனால் சகபதிவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் நம்
சக பதிவருக்கு மே மாதம் 13 ந் தேதி பிறந்த நாள் வருகின்றது.
365 நாட்களில், "நான்" பிறந்தேன் என்று சொல்லி பெருமைப்பட்டு
கொள்ள கொடுத்து வைத்த நாள் என அவர் சொல்கின்றார்.
எனவே சக பதிவர்களே-நண்பர்களே-நீங்கள் மே மாதம் 13 ந்
தேதி அன்று(.இன்னும் ஒரு நாள் கூட இல்லை) தோரணம்
கட்ட மறக்காதீங்க. மைக் செட், பாட்டு கச்சேரி, பட்டாசு,
தங்க செயின், ஆயிரம் ரூபாய் நோட்டு மாலை எல்லாம்
ஆர்டர் செய்துவிடுங்கள்.மறக்காமல் வாழ்த்தலாம் வாங்க
(http://vazthalamvanga.blogspot.com/) பதிவிற்கு வந்து வாழ்த்து
சொல்லிவிட்டுபோங்க.வருகைதந்து
வாழ்த்துபவர்கள் எல்லோருக்கும் அறுசுவையுடன்விருந்து
அவரவர் வீட்டிலேயே செய்து
சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.

...."தம்பட்டம் தாயம்மா" வை விட இந்த "தம்பட்டம் தங்கையா" ஸ்டைல் நல்லா இருக்குது. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

r.selvakkumar கூறியது...
பயனுள்ள மென்பொருள் மற்றும் சகபதிவரின் பிறந்தநாள் அறிமுகம் !
வாழ்த்துகள்!//

நன்றி செல்வகுமார் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
வழக்கம்போல அசத்தல் பதிவு வேலன் சார்//

நன்றி மகாராஜன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
அருமையான பதிவு நண்பரே..//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி குணசீலன் அவர்களே...வாழ்க வளமுடன்்,வேலன்.

வேலன். said...

mahaboob கூறியது...
நல்ல சாப்ட்வேர் பதிவிடுகிறிர் ஆனால் எல்லாம் ரிஜிஇஸ்டர் கி கேட்கிறது
தயவுசெய்து இலவமான சாப்ட்வேர் பதிவிடவும் பதிவிற்கு வாழ்த்துக்கள்//
கூடுமான வரை இலவச சாப்ட்வேர்களை பதிவிடுகின்றேன. சில சாப்ட்வேர்கள் 15 நாள் 30 நாள் டிரையலில் கிடைக்கின்றது. அந்த டிரையல் காலத்தில் நீங்கள் பயன்படுத்திப்பாருங்கள்.பிடித்திருந்தால் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.மேலும் இந்த பதிவில் கொடுத்துள்ள சாப்ட்வேர் இலவசம் தானே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

malgudi கூறியது...
பயன் உள்ள மென்பொருள்//
தங்கள் பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என் எண்ணுகின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

’மனவிழி’சத்ரியன் கூறியது...
வேலன் சார்,

உண்மையில் மிகமிகப் பயனுள்ள பதிவு.

மிக்க நன்றி.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள்.உங்கள கவிதை அருமையாக உள்ளது:.கட்டுமானத்திற்கு தேவையான சாப்ட்வேர்கள் - பதிவுகள் உள்ளது விரைவில் அவைகளை வெளியிடுகின்றேன். வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
// இந்த சாப்ட்வேரை சாப்ட்வேர்களில் அஷ்டாவாதினி
எனலாம். நான் பதிவிடும் சிறந்த சாப்ட்வேர்களில் இதுவும்
சேரும் என எண்ணுகின்றேன் //
வேலன்

சரிதான் மாப்ள, பிரமாதமாத்தான் இருக்கு. இந்த மாதிரி ஒன்று இருக்கு என்பதை
நோண்டி,துருவி, கடைந்த சலித்து ,புடைத்து கடைசியில் அழகாக, எப்படி பயன் படுத்துவது
என்ற விளக்கமும் கொடுத்து.......................ரொம்ம ரொம்ம நல்ல ,சாத்வீகமான ,தங்கமான
மனசு வேணும் மாப்பு இப்படி ஒரு பதிவு போட.
"தங்கமனசு கார மாப்ஸ் மாஸ்டர் வேலன் வாழ்க வழக.//

நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
நல்ல பகிர்வு!//

நன்றி சகோதரி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வணக்கம் வேலன்சார். அருமையான பல பயனுள்ள மென்பொருள் அறிமுகம் செய்துள்ளீர்கள்.

...நன்றி சார்...//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மச்சவல்லவன் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
வேலன் சார்,

வழக்கம்போல அசத்தல் பதிவு//

நன்றி குமார்சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நல்ல பதிவு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி சசிகுமார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

Duncanywcz said...

Mrs.Menagasathia கூறியது... நல்ல பகிர்வு!// நன்றி சகோதரி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...