திருக்கழுக்குன்றம் சங்கு பிறந்தது-வேலன்.

இறைவன் இன்றும் நம்முடன் இருக்கின்றான் என்பதற்கு இன்று நடந்த நிகழ்ச்சியே சாட்சி.திருக்கழுக்குன்றம்-சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும் - செங்கல்பட்டிலிருந்து 14 கிலோ மீட்டடரிலும் - மகாபலிபுரம் -கல்பாக்கம் - திருப்போருர் - மதுராந்தகம் -மேல்மருவத்துர் -ஆகிய புகழ்பெற்ற ஊர்களிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஊருக்கு நடுவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குளம்-சங்கு தீர்த்த குளம் ஆகும்.
இதில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை சங்கு பிறக்கும். அதுசமயம் குளத்தில் அலைகள் அதிகமாவதுடன் - குளத்தின் ஓரங்களில் நுரை கட்டும்.இன்று காலையிலும் 9 மணிஅளவில் அதுபோல் சங்கு பிறந்தது. ஆயிரக்கனக்கான மக்கள் அதனை கண்டுகளித்தார்கள்.









சங்கு கரை ஓதுங்கியதும் கோயில் அர்ச்சகர்கள் அதை தட்டில் எடுத்துவைப்பார்கள். அதுசமயம் அதன் உள்ளே உள்ள சங்கு பூச்சியானது தனது சங்கு ஓட்டை பிரித்துவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே சென்றுவிடும்.அந்த நிகழ்வுக்காக அர்ச்சகர்கள் படிகளில் அமர்ந்துள்ளார்கள்.


சாதாரணமாக உப்பு நீரில் -கடலில் தான் சங்கு பிறக்கும். இங்கு சாதாரண தண்ணீரிலேயே இது தோன்றுகின்றது. மேலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான இதுதோன்றும்.இந்த சங்குடன் சேர்த்து இதுவரை பிறந்துள்ள 7 சங்குகள் இங்குள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பினால் எப்போழுது வேண்டுமானாலும் அதை பார்க்கலாம்.இன்றைய நிகழ்ச்சியை பற்றிய விரிவான வீடியோ தொகுப்பு விரைவில்.....
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

33 comments:

கடம்பவன குயில் said...

ஆஹா....அற்புதம். நேற்று இரவுதான் வேதபுரீஸ்வரைப்பற்றியும் சங்கு திருக்குளத்தில் தோன்றுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். இன்றுதான் தோன்றுமென்று தெரியாது. காலையிலேயே ஐயனின் திருவிளையாடலை படிக்கும் பாக்கியம். நன்றி.

. said...

wow... unbelievable...very interesting

sakthi said...

அன்புள்ள அண்ணா ,
நம்பமுடியாத அதிசயம் .இறைவனின் அதிசயத்தில் இதுவும் ஒன்று .சங்கை பார்த்த நீங்கள் பாக்கியசாலி .இந்த செய்தியை பதிவாக எழுதி வெளி உலகத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகள் கோடி .
நட்புடன் ,
கோவை சக்தி

hamaragana said...

அன்புடன் வணக்கம் திரு வேலன்
தங்களின் இந்த பதிவு அதி அற்புதம் மிக்க வந்தனம்

dharumaidasan said...

THANK YOU VERY MUCH SIR,
THIS IS THE FIRST TIME I SEEN
YOUR TOWN SANGU.
THANKS LOT AGAIN

அ. வேல்முருகன் said...

அந்த ஊரில் 3 ஆண்டுகள் வாழ்த்தேன் அதுவும் குளத்திற்கு எதிரில் 2 ஆண்டுகள் வாழ்ந்தேன். (தபால் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீடு) அப்போதே கதை கேட்டதுண்டு. இன்றுவரை அதன் மேல் நம்பிக்கையில்லை. கழுகு வந்ததென்று கூட்டங்கூட்டமாய் வந்து சென்றனர். 8 ஆண்டுகள் மேலாயிற்று கழுகு காணாமல் போய். கடவுள் என்ன ஓடி பிடித்து விளையாடுகிறாரா

மாய உலகம் said...

ஆஹா... அருமையானதொரு தகவல்... பகிர்வுக்கு நன்றி சகோதரரே

'பரிவை' சே.குமார் said...

ஆச்சரியமானதொரு பகிர்வு.
புதிய தகவல்... பகிர்வுக்கு நன்றி.

அன்பு said...

ஆச்சரியத்தை உண்டாக்கிய பதிவு.

Cheran said...

நண்பர்  அ. வேல்முருகன்
அவர்களே!
 நடந்தது அனைத்தும்  உண்மை. கழுகுகள் இரண்டும் இரு முனிவர்கள். அவர்கள் முக்தியடைந்து விட்டனர். 
நாங்கள் பலமுறை நேரில் கண்ட நிகழ்வுதான் அவை. ஆனால் அவற்றை அழைப்பதற்குள் ஐயர் பெரும்பாடு படுவார். பண்பற்ற வட புலத்தார் (வட இந்தியர்கள்) சப்தம் எழுப்பி அவற்றை விரட்டப் பார்ப்பர். அது முடிந்த கதை. இறைவன் அருள் அனைவருக்கும் கிட்டாது. அது கிட்டியவர்களுக்குதான் தெரியும். Please call Soma to know further 98405 94971 and Cheran 9941761588

Cheran said...

நண்பர்  அ. வேல்முருகன்
அவர்களே!
 நடந்தது அனைத்தும்  உண்மை. கழுகுகள் 
இரண்டும் 
இரு முனிவர்கள். 
அவர்கள் முக்தியடைந்து 
விட்டனர். 
நாங்கள் பலமுறை 
நேரில் கண்ட நிகழ்வுதான்
 அவை. ஆனால் அவற்றை 
அழைப்பதற்குள் 
ஐயர் பெரும்பாடு படுவார்.
 பண்பற்ற வட புலத்தார் 
(வட இந்தியர்கள்)
 சப்தம் எழுப்பி 
அவற்றை விரட்டப்
 பார்ப்பர். அது முடிந்த கதை. 
இறைவன் அருள் 
அனைவருக்கும்
 கிட்டாது. 
அது கிட்டியவர்களுக்கு
தான் தெரியும்.
Please call Soma to know further
98405 94971 and
Cheran 9941761588

ஜெய்லானி said...

சில கேள்விகள் மனதில் ஓடுது.ஆனால் அடுத்தவர்கள் நம்பிக்கைக்கு எப்போதும் நான் குறுக்கே இருப்பது இல்லை :-)


சின்ன வயதில் ஸ்கூல் டூர் அங்கே வந்தேன் . கழுகு வருமுன்னு சொன்னாங்க ..சுமார் 3 மணிநேரம் காத்திருந்தும் கழுகு அப்போது வரவில்லை . ((ஐயர் சாப்பாட்டை வைத்துக்கொண்டு எதிர்பார்த்தும் ஒன்னும் ஆகல ))

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்... பகிர்வுக்கு நன்றி

dhan pani said...

esan karunai namakku undu .

dhan pani said...

video pathuvu pakirnthal nanraga irukkum.

வேலன். said...

கடம்பவன குயில் said...
ஆஹா....அற்புதம். நேற்று இரவுதான் வேதபுரீஸ்வரைப்பற்றியும் சங்கு திருக்குளத்தில் தோன்றுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். இன்றுதான் தோன்றுமென்று தெரியாது. காலையிலேயே ஐயனின் திருவிளையாடலை படிக்கும் பாக்கியம். நன்றி.
ஃஃ

தங்களுக்கு ஏற்கனவே திருக்குழுக்குன்றம் பற்றி தெரியுமா நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Hari said...
wow... unbelievable...very interesting
ஃஃ

நன்றி ஹரி சார்...தங்கள் வருகக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi said...
அன்புள்ள அண்ணா ,
நம்பமுடியாத அதிசயம் .இறைவனின் அதிசயத்தில் இதுவும் ஒன்று .சங்கை பார்த்த நீங்கள் பாக்கியசாலி .இந்த செய்தியை பதிவாக எழுதி வெளி உலகத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகள் கோடி .
நட்புடன் ,
கோவை சக்திஃஃ

உங்களுக்கும் சங்கு பார்க்கும் பாக்கியம் கிடைக்கவேண்டுமா-இன்று இரவே பஸ்பிடித்து ஊருக்கு வாருங்கள்.நேரில் சங்கு தரிசனம் செய்யலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துகும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

hamaragana said...
அன்புடன் வணக்கம் திரு வேலன்
தங்களின் இந்த பதிவு அதி அற்புதம் மிக்க வந்தனம்
ஃஃ

நன்றி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dharumaidasan said...
THANK YOU VERY MUCH SIR,
THIS IS THE FIRST TIME I SEEN
YOUR TOWN SANGU.
THANKS LOT AGAIN
ஃஃ

நன்றி சார்..தங்கள் கருத்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அ. வேல்முருகன் said...
அந்த ஊரில் 3 ஆண்டுகள் வாழ்த்தேன் அதுவும் குளத்திற்கு எதிரில் 2 ஆண்டுகள் வாழ்ந்தேன். (தபால் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீடு) அப்போதே கதை கேட்டதுண்டு. இன்றுவரை அதன் மேல் நம்பிக்கையில்லை. கழுகு வந்ததென்று கூட்டங்கூட்டமாய் வந்து சென்றனர். 8 ஆண்டுகள் மேலாயிற்று கழுகு காணாமல் போய். கடவுள் என்ன ஓடி பிடித்து விளையாடுகிறாராஃ

நீங்கள் ஊரில் இருந்தசமயம் அதுவும் குளத்திற்கு எதிரில் இருந்தசமயம் சங்குபிறந்திருந்தால் நம்பிஇருப்பீர்கள் என நினைக்கின்றேன்.உங்களைப்போல கழுகு வரும்நாளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாய உலகம் said...
ஆஹா... அருமையானதொரு தகவல்... பகிர்வுக்கு நன்றி சகோதரரே
ஃஃ

நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
ஆச்சரியமானதொரு பகிர்வு.
புதிய தகவல்... பகிர்வுக்கு நன்றி.
ஃஃ

குமார் சார்..உங்கள் குழந்தைகளையும் உங்கள் வீட்டிலையும் அழைத்துகொண்டு வாருங்கள. இங்குள்ள ஆச்சரியதகவல்களை நிறைய சுற்றி காண்பித்து சொல்கின்றேன்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்பு said...
ஆச்சரியத்தை உண்டாக்கிய பதிவு.ஃஃ

நன்றி அன்பு சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Cheran said...
நண்பர் அ. வேல்முருகன்
அவர்களே!
நடந்தது அனைத்தும் உண்மை. கழுகுகள் இரண்டும் இரு முனிவர்கள். அவர்கள் முக்தியடைந்து விட்டனர்.
நாங்கள் பலமுறை நேரில் கண்ட நிகழ்வுதான் அவை. ஆனால் அவற்றை அழைப்பதற்குள் ஐயர் பெரும்பாடு படுவார். பண்பற்ற வட புலத்தார் (வட இந்தியர்கள்) சப்தம் எழுப்பி அவற்றை விரட்டப் பார்ப்பர். அது முடிந்த கதை. இறைவன் அருள் அனைவருக்கும் கிட்டாது. அது கிட்டியவர்களுக்குதான் தெரியும். Please call Soma to know further 98405 94971 and Cheran 9941761588
ஃஃ

நன்றி சேரன் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துகும் நன்றி..
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

Cheran said...
நண்பர் அ. வேல்முருகன்
அவர்களே!
நடந்தது அனைத்தும் உண்மை. கழுகுகள்
இரண்டும்
இரு முனிவர்கள்.
அவர்கள் முக்தியடைந்து
விட்டனர்.
நாங்கள் பலமுறை
நேரில் கண்ட நிகழ்வுதான்
அவை. ஆனால் அவற்றை
அழைப்பதற்குள்
ஐயர் பெரும்பாடு படுவார்.
பண்பற்ற வட புலத்தார்
(வட இந்தியர்கள்)
சப்தம் எழுப்பி
அவற்றை விரட்டப்
பார்ப்பர். அது முடிந்த கதை.
இறைவன் அருள்
அனைவருக்கும்
கிட்டாது.
அது கிட்டியவர்களுக்கு
தான் தெரியும்.
Please call Soma to know further
98405 94971 and
Cheran 9941761588ஃஃ

நீங்கள் கூறியுள்ளது முற்றிலும் உண்மையே..இறைவன் அருள் அனைவருக்கும் கிட்டாது...அது கிட்டியவர்களுக்குதான் தெரியும்.நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி said...
சில கேள்விகள் மனதில் ஓடுது.ஆனால் அடுத்தவர்கள் நம்பிக்கைக்கு எப்போதும் நான் குறுக்கே இருப்பது இல்லை :-)


சின்ன வயதில் ஸ்கூல் டூர் அங்கே வந்தேன் . கழுகு வருமுன்னு சொன்னாங்க ..சுமார் 3 மணிநேரம் காத்திருந்தும் கழுகு அப்போது வரவில்லை . ((ஐயர் சாப்பாட்டை வைத்துக்கொண்டு எதிர்பார்த்தும் ஒன்னும் ஆகல ))
ஃஃ

நன்றி ஜெய்லானி சார். நீங்கள் இந்தியாவரும்போது இங்கு வாருங்கள்.உங்களுக்கு அனைத்தையும் விளக்கி காண்பிக்கின்றேன்.நன்றி
வாழக்வ ளமுடன்.
வேலன்.

வேலன். said...

Rathnavel said...
நல்ல பதிவு.
நன்றி.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
ஃஃ

நன்றி ரத்னவேல் சார்..தங்கள் வருகக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம்ம்... பகிர்வுக்கு நன்றி
ஃஃ

நன்றி ஞானசேகரன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dhan pani said...
esan karunai namakku undu .

நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

dhan pani said...
video pathuvu pakirnthal nanraga irukkum.
ஃஃ

சற்று உடல்நிலை எனக்கு சரியில்லாததால் பதிவு போடஇயலவில்லை. விரைவில் பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

அ. வேல்முருகன் said...

சேரன் அவர்களுக்கு

கழுகுகள் முனியானது, முக்தியானது. வேறு ஏதாக மாறும் சொல்ல முடியுமா? முனி கழுகான விடயம் அறிந்தவர், இதையும் அறிந்திருப்பார் என்பதாலும், தற்போதும் முனியாகவோ அல்ல வேறு ஏதோ ஒரு ஜந்துவாக இருந்தாலோ வழிபடலாம் என்றுதான்

நாங்கள் இருந்தது அப்போதைய 14, வடக்கு குளக்கரை தெரு, பிரசாதம் கொண்டு செல்லும் நபர் அதே தெருவில் கடைசில் இருந்தார். கழுகை நானும் பார்த்திருக்கிறேன்.

வேலன் அவர்களுக்கு, நான் அங்கு வாழ்ந்தபோது அப்படியொரு நிகழ்வு நடக்கவில்லை. ஆனால் இப்போது காலநேரம் கணித்து (appointment)சங்கு வருகிறது என்றால் கலி முத்தி விட்டது என சொல்லதான் தோன்றும்

Related Posts Plugin for WordPress, Blogger...