வேலன்:-இழந்ததை மீட்டஎடுக்க -windows data recovery

சில நேரங்களில் நாம் தவறுதலாகவோ தெரியாமலோ டிரைவில் உள்ள பைல்களை டெலிட் செய்துவிடுவோம். அவ்வாறு தவறவிட்ட பைல்களை மீண்டும் மீட்டு எடுக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்திடவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் நீங்கள் எதனை மீட்டுஎடுக்க போகின்றீர்களோ அதனை தேர்வு செய்திடவும் டாக்குமென்ட்.போல்டர்கள்.இமெயில்கள்.புகைப்படங்கள்.ஆடியோ மற்றும் வீடியோ என எது தேவையோ அதனை தேர்வு செய்திடுங்கள். உங்களுக்கு அனைத்தும் தேவையென்றால் ஆல் டாக்குமெண்ட் என்பதனை தேர்வு செய்திடுங்கள்.
அடுத்து எந்த டிரைவிலிருநது உங்களுக்கு உங்களுடைய பைல்கள் மீட்டுஎடுக்கவேண்டுமோ அந்த டிரைவினை தேர்வு செய்திடுங்கள்.உங்களுக்கு ஸ்கேன் ஸக்ஸஸ் என தகவல்வரும் .
நீங்கள் தேர்வு செய்த மொத்த் பைல்களும் உங்களுக்கு தெரியவரும். நீங்கள் ப்ரிவியு பார்த்து தேவையென்றால் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதனை பதிவிறக்கம் செய்யும் போது நிங்கள் இழந்த அனைத்து பைல்களும் உஙகளுக்கு கிடைக்கும் தேவையானதை ப்ரிவியூபார்த்து தேர்வு செய்து ரிக்கவரி செய்வதற்கான இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் உங்களுக்கான பைலினை நீங்கள் ரிக்கவரி செய்து கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...