வேலன்-டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க

வேலன்:-டாக்ஸ்பாரில் நமது பெயர் வரவழைக்க.

டாக்ஸ்பாரில் நேரத்திற்கு அடுத்ததாக நமது பெயர் 

வந்தால் எப்படி யிருக்கும்? புதிதாக நமது கம்யூட்டரை

பார்ப்பவர்கள் வியந்து போவார்கள். அந்த இடத்தில் 

நமது பெயரையோ - திருமணமாகியிருந்தால் மனைவி

பெயரையோ - திருமணமாகி குழந்தைகள் இருந்தால்

குழந்தைகள் பெயரையோ நாம் அங்கு பதியவைத்து

மற்றவர்களை ஆச்சரியப்படுத்தலாம். இனி அந்த 

இடத்தில் பெயர் எப்படி வரவழைப்பது என பார்க்கலாம்.

முதலில் Start > Control Panel ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.

அதில் கீழ்கண்ட வாறு செய்தி வரும். அதில் உள்ள 
Date,Time , Language and Regional Options தேர்வு செய்யுங்கள்.


மீண்டும் உங்களுக்கு மேற்கண்ட வாறு காலம் தோன்றும்.

அதில் Region and Language Option -ஐ மீண்டும் தேர்வு

 செய்யவும். கீழ்கண்ட காலம் ஒன்று ஓப்பன் ஆகும்.

அதில உள்ள Customise தேர்வு செய்யவும்.
 தேர்வு செய்தால் Customize Regional Option என்ற காலம்

மீண்டும் ஓப்பன் ஆகும். அதில் உள்ள Time என்பதை

தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட காலம் 

ஓப்பன் ஆகும். அதில் AM- மற்றும் PM என்று 

இருக்கும் இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை 

தட்டச்சு செய்யவும் . பின் Ok - Apply - கொடுத்து வெளி

யேறவும்.
இப்போழுது நீங்கள் டாக்ஸ்பாரில் உள்ள கடிகாரத்தை

பார்த்தால் நேரத்தின் அருகே நீங்கள்  சூட்டிய பெயர்

தெரியவரும். 

இந்த தகவல் புதியவர்களுக்காக.

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப் பூவில் உதிரிப் பூ
உங்களிடம் உள்ள அனைத்து பழைய புகைப்படங்களையும் (கருப்பு – வெள்ளை,கலர்) ஸ்கேனர் மூலம் கணிணியில் பதித்துவைத்துவிடவும். ஸ்கேனர் இல்லாத பட்சத்தில் டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படங்களை மீண்டும் புகைப்படமெடுத்து அதை கணிணியில்பதித்து கணிணி மூலம் சி.டி.யாக மாற்றி வைத்துவிடவும். உங்களிடம் உள்ள பழைய புகைப்படங்கள்   பூச்சியினால் அரித்துவிட்டாலும், கலர் மங்கிவிட்டாலும் உங்களிடம் உள்ள சி.டி.மூலம் புதிதாக காப்பி எடுத்துவிடலாம்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

ISR Selvakumar said...

Forget about the use. But this will increase the interest among learners.
Expecting more tips like this.

யூர்கன் க்ருகியர் said...

கணினியில் outlook உபயோகிக்கும் போது இந்த நேரத்தை (பெயருடன்) எடுத்துக்கொள்கிறது.
சில முக்கியமான அலுவலக மெயில் - அனுப்பும் பொழுது இது இடையூறாக இருக்கலாம். நேரம் சம்மந்தமான பார்முலா MS Excel- லில் உபயோகிக்கும் போதும் பிரச்சினையாக இருக்கலாம்.

சொந்த உபயோக கணினியில் நீங்கள் சொன்ன மாதிரி செய்யலாம். நன்றி

butterfly Surya said...

தினம் தினம் புதிய டிப்ஸ்.

அருமை.

வாழ்த்துக்கள்..

வேலன். said...

Forget about the use. But this will increase the interest among learners.
Expecting more tips like this.//
தங்கள் கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி
செல்வகுமார் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கணினியில் outlook உபயோகிக்கும் போது இந்த நேரத்தை (பெயருடன்) எடுத்துக்கொள்கிறது.
சில முக்கியமான அலுவலக மெயில் - அனுப்பும் பொழுது இது இடையூறாக இருக்கலாம். நேரம் சம்மந்தமான பார்முலா MS Excel- லில் உபயோகிக்கும் போதும் பிரச்சினையாக இருக்கலாம்.

சொந்த உபயோக கணினியில் நீங்கள் சொன்ன மாதிரி செய்யலாம். நன்றி//

சொந்த கணிணி உபயொகிப்பவர்களுக்காகவும், குழந்தைகளுக்கு அவர்கள்பெயர் கம்யூட்டரில் வந்தால் மகிழ்ச்சிஅடைவார்கள் - அவர்களுக்காகவும் இந்த பதிவு வெளியிட்டுள்ளேன்.
தங்கள் கருத்துககு நன்றி ஜுர்கேன் க்ருகேர் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தினம் தினம் புதிய டிப்ஸ்.

அருமை.

வாழ்த்துக்கள்..//

தங்கள் கருத்துக்கு நன்றி வண்ணத்துப்பூச்சியார் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Muthu Kumar N said...

வேலன் முடிந்தால் இந்த இடுகையில் உள்ள எழுத்துப்பிழையை சரிசெய்யுங்கள். டாஸ்க் பார் என்பதற்குப் பதிலாக டாக்ஸ் பார் என்று இருக்கிறது.

நேரம் காட்டுமிடத்தை சிஸ்டம் டிரே என்று சொல்வார்கள். புதிதாய் வருபவர்களுக்கு அதையும் சொல்லி கொடுத்தால் அவர்களுடைய கணிணி திறனை மேலும் மெருகூட்ட உதவும்.

இப்பதிவை இப்போது தான் தற்செயலாக பார்க்க நேரிட்டது அதனால்தான் இவ்வளவு தாமத பின்னூட்டம்.

என்றும் நட்புடன்
வாழ்க வளமுடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

radhu said...

very power full& use full blog for new learner thank you very much nanba

Related Posts Plugin for WordPress, Blogger...