வேலன்-போட்டோஷாப் - பேப்பர் வெயிட்டில் புகைப்படங்கள் வரவழைக்க

சாராண பேப்பர் வெயிட் பார்த்திருப்போம். ஒரு மாறுதலுக்கு கியுப்பில் நமது புகைப்படங்களை ஒட்டி அழகான பேப்பர் வெயிட்டாக வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கு்ம். இதற்காக நாம் மெனக்கெட்டு ஒவ்வொரு போட்டோவாக கட்செய்து ஒட்ட வேண்டாம். போட்டோஷாப்பில் நாம் தேவையான புகைப்படங்கள் கொடுத்தால் போதும். அதுவே அழகாக பாக்ஸ் அளவிற்கு நமக்கு மாற்றி தந்துவிடும். அந்த Action-ஐ பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் தேவையான 5 புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் நம் சக பதிவர்களான திரு.முனைவர் குணசீலன்.திரு.சபீர்.திரு.ஜெய்லானி(அவர் புகைப்படம் கிடைக்காததால் அவரின் பெவரைட் பச்சை ரோஜா படம் எடுததுள்ளேன்) திரு.ஞானசேகரன்,மற்றும் திரு.ப்ரியமுடன் வசந்த்.
ஒவ்வொரு படங்களும் 747 x 747 பிக்ஸல் அளவிலும் ரெசுலேஷன் 300 பிக்ஸல் அளவிலும் கிராப் டூல் மூலம் கட் செய்து தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் தேர்வு செய்த படங்கள் கீழே-இப்போது Action Box Open செய்து அதில் இந்த Paper Cube  ஐ கொண்டுவந்துவிடுங்கள். இதை பற்றி முந்தைய பதிவுகளில் விரிவாக போட்டுள்ளேன் புதியவர்கள் இங்கு சென்று பார்த்துக்கொள்ளவும்..இப்போது உங்களுக்கு Action Paper Cube  இந்த மாதிரி வந்துவிடும். இப்போது அதில் உள்ள 5 images  என்பதை கிளிக்செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு படங்களை தேர்வு செய்ய சொல்லும் . நீங்கள் முதல் படத்தை தேர்வு செய்யுங்கள். நான் தேர்வு செய்த படம் கீழே-
இப்போது Continue கொடுத்து அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யுங்கள். சில நிமிடங்களுக்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ தோன்றும்.
இதை A4 போட்டோ பேப்பரிலோ - சாதாரண பேப்பரில் எடுத்து கனமான அட்டையில் ஒட்டிக்கொள்ளுங்கள. இதில் படம் உள்ள இடம் தவிர காலியாக உள்ள இடங்களை வெட்டி எடுத்துவிடுங்கள். பின்னர் படம் தவிர்த்து ஓரங்களை மடித்துக்கொள்ளுங்கள். நல்ல ஒட்டும் பசையை எடுத்து அதில் உள்ளவாறு ஒவ்வொன்றாக ஒட்டுங்கள். அவ்வளவுதான் பேப்பர் வெயிட் அழகான படங்களுடன் ரெடி.
இதே படத்தினை ஒரே போட்டோவின் மூலமும் செய்யலாம். அனைத்துப்பக்கங்களிலும் ஒரே போட்டோ வரும்.குழந்தைகள் போட்டோ போடும் சமயம் மிக அழகாக இருக்கும். 
சக பதிவரின் குழந்தை படம் கீழே-
இதை போட்டோ பாக்ஸில் கொண்டுவந்தபின் வந்த படம் கீழே-
நாளை விடுமுறைதானே..அழகான புகைப்படங்களை இதுபோல் செய்து பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
செய்து பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

கக்கு - மாணிக்கம் said...

நல்லாத்தான் இருக்கு மாப்ஸ்,
மேலே பாலிதீன் லாமினேட் செய்து பின்னர் தயாரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்,
நாளடைவில்படங்கள் நிறம் மாறுவதையும் தவிர்க்கலாம் இல்லையா??

அன்புடன் அருணா said...

சூப்பர்!

Mohamed Niyaz, Kuala Lumpur said...

Very use lesson for us, sure i will try this
Thanks and regards
Yours
Mohd Niyaz
Kuala Lumpur

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் வேலன்...

பாராட்டுகள் நன்றியும்.....

ஆ.ஞானசேகரன்

ஜெய்லானி said...

வாவ் சூப்பர்..

அடநம்ம பச்சை ரோஸா..

aravind said...

அருமையான பதிவு....
மிக்க நன்றி.. நன்றி.. நன்றி..
அரவிந்த்

priya said...

"அடோப் ரீடர் படிக்க பக்கத்தை திறக்கும் பொழுது There was an error processing a page. There was a problem reading this document (135) இந்த error வருகிறது.file இருப்பதை படிக்க முடியவில்லை. இந்த error வராமலிருக்க என்ன செய்வது என்று கூறவும்.

priya said...

பாராட்டுகள் நன்றியும்..
அருமையான பதிவு...

சே.குமார் said...

வாவ் சூப்பர்..

ennanga maranthachchaaaa.......


namma valaikku varavey illai

http://www.vayalaan.blogspot.com

பிரகாசம் said...

மேற்கண்ட கட்டளையைக் கொடுத்ததும் படங்கள் தேர்வு செய்வதற்குப் பதிலாக untitled1 என புதிதாக ஒரு ஃபைலை உருவாக்கும் கட்டளைதான் வருகிறது. அதைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்று உதவ வேண்டுகிறேன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நல்லாத்தான் இருக்கு மாப்ஸ்,
மேலே பாலிதீன் லாமினேட் செய்து பின்னர் தயாரித்தால் இன்னும் நன்றாக இருக்கும்,
நாளடைவில்படங்கள் நிறம் மாறுவதையும் தவிர்க்கலாம் இல்லையா??//

இறுதியிலும் லாமினேட் செய்துகொள்ளலாம். அழகாக இருக்கும. தங்கள் வருஐகக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
சூப்பர்//

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Mohamed Niyaz, Kuala Lumpur கூறியது...
Very use lesson for us, sure i will try this
Thanks and regards
Yours
Mohd Niyaz
Kuala Lumpur//

நன்றி முஹம்மது நியாஸ் சார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..முயற்சி செய்துபாருங்கள் அருமையாக வரும.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
வணக்கம் வேலன்...

பாராட்டுகள் நன்றியும்.....

ஆ.ஞானசேகரன்//

நன்றி ஞானசேகரன் சார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி...
வாழக் வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
வாவ் சூப்பர்..

அடநம்ம பச்சை ரோஸா..//

நீங்க தான் உங்க புகைப்படத்தை தராமல் பச்சை ரோஸாவை வைத்துள்ளீர்களே...தங்கள் வருகைக்கும கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

aravind கூறியது...
அருமையான பதிவு....
மிக்க நன்றி.. நன்றி.. நன்றி..
அரவிந்த்//

நன்றி அரவிந்த் சார்..
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி.

வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

priya கூறியது...
"அடோப் ரீடர் படிக்க பக்கத்தை திறக்கும் பொழுது There was an error processing a page. There was a problem reading this document (135) இந்த error வருகிறது.file இருப்பதை படிக்க முடியவில்லை. இந்த error வராமலிருக்க என்ன செய்வது என்று கூறவும்.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..
நான் பதிவிறக்கினேன் சரியாக வந்ததே..மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கவும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

priya கூறியது...
பாராட்டுகள் நன்றியும்..
அருமையான பதிவு..//
நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
வாவ் சூப்பர்..

ennanga maranthachchaaaa.......


namma valaikku varavey illai

http://www.vayalaan.blogspot.com//

வாங்க குமார்சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பிரகாசம் கூறியது...
மேற்கண்ட கட்டளையைக் கொடுத்ததும் படங்கள் தேர்வு செய்வதற்குப் பதிலாக untitled1 என புதிதாக ஒரு ஃபைலை உருவாக்கும் கட்டளைதான் வருகிறது. அதைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்று உதவ வேண்டுகிறேன்.//
தங்கள் சரியாக புகைப்படத்தை தேர்வு செய்திருக்கமாட்டீர்கள் என் எண்ணுகின்றேன்.மீண்டும் ஒரு முறை முயற்சி செய்துபார்க்கவும. சரியாக வரவில்லையென்றால் தங்கள் இ-மெயில் முகவரி தரவும். பதிலை அனுப்புகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

kathir said...

அன்பின் அண்ணா உங்களை அறிமுகப்படுத்திய கணினி உலகிற்கு மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன். எல்லா விடயங்களையும் உங்களுக்கே உரித்தான பாணியில் மிக இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடியவாறு விளங்கப்படுத்தும் உங்களின் அறிவாற்றல் நீடிப்பதாக! மனமாற உங்களை என்றென்றும் வாழ்த்துவது எமது கடமை வாழ்க வேலன் அண்ணா வளர்க உங்களின் பணி.........நன்றி....

Tildenrvtd said...

நல்லாத்தான் இருக்கு மாப்ஸ், மேலே பாலிதீன் லாமினேட் செய்து பின்னர் தயாரித்தால் இன்னும் நன்றாக இருக்கும், நாளடைவில்படங்கள் நிறம் மாறுவதையும் தவிர்க்கலாம் இல்லையா??

Anonymous said...

UGG Australia has produced some unique and fun types in boots for women - Classic Stripe UGG Boots really are a perfect illustration of this.
These forms of Ugg Boots Clearance might be found in 2 colors from a shop at fine sand too as saying.

What most are finding are imitation, fake UGG
Boots.

Visit my site; prada

Related Posts Plugin for WordPress, Blogger...