வேலன்-போட்டோஷாப்-நொடியில் ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ரெடி செய்ய

சில அப்ளிகேஷன்கள் சமர்ப்பிக்கும் சமயம் நமக்கு ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் தேவைப்படும். இந்த அக்ஷன் டூலில் நாம் சுலபமாக ஸ்டாம்ப் சைஸ் கலர் மற்றும் கருப்பு வெள்ளை புகைப்படங்களை கொண்டுவரலாம்.
2 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை டவுண்லோடு செய்து போட்டோஷாப்பில் லோடுசெய்துகொள்ளுங்கள். இப்போது புகைப்படத்தை திறந்துகொள்ளுங்கள்.
இப்போது ஆக்ஷன் டூலை கிளிக் செய்யுங்கள். இதில் இரண்டு வகை ஆக்ஷன் டூல்கள் உள்ளது. ஒன்று கலர் புகைப்படம் எடுக்க. மற்றொன்று கருப்பு வெள்ளை படம் எடுக்க.இப்போது நான் கலர் புகைப்படம் எடுக்கும் ஆக்ஷன் டூலை தேர்வு செய்துள்ளேன்.அதை தேர்வு செய்ததும் உங்களுக்கு விண்டோவில் கிராப் டூலில் விண்டோ தோன்றும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புகைப்படம் அளவிற்கு ஏற்ப விண்டோவினை நகர்த்தவும். சரியாக முகத்திற்கு ஏற்ப தேவையான அளவிற்கு அமைக்கவும்.
இப்போது Enter- என்டர் தட்டவும். நொடியில் உங்களுக்கு 18 ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்கள் கிடைக்கும்.
இதைப்போலவே ஆக்ஷன் டூலில் கொண்டுவந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தையும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மற்றும் ஒரு மாடல் படம் கீழே-
கருப்பு வெள்ளையில் படம் கீழே-
இதற்கு முன்னர் நான் பதிவிட்ட நொடியில் பாஸ்போர்ட் சைஸ்போட்டோ ரெடி செய்ய மற்றும் நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ரெடி செய்ய எடுக்க பதிவுகளை பார்க்க சிகப்பு நிற தலைப்பில் கர்சரை வைத்து கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும். பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

மாணவன் said...

போட்டோஷாப் தொடர் பதிவா அசத்துங்க சார் அருமை.
நொடியில் ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ரெடி செய்ய"
நான் எதிர்பார்த்த ஒன்று பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்,

தொடருங்கள்..........

சே.குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு. ஸ்டுடியோவுக்கு ஓட வேண்டியதில்லை...

Jaleela Kamal said...

அருமை.
ஆமாம் இனி ஸ்டியோவுக்கு ஓட வேண்டியதில்லை.
பயனுள்ள பதிவுகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கீங்க, வாழ்த்துக்கள்

Speed Master said...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்,

ஒரு உதவீ
குழந்தைகளுக்கான
வீடு கட்டும் மாதிரி Game இருந்தால் சொல்லவும்

Anonymous said...

இன்று தான் உங்கள் தளம் கண்டேன்.மிகவும் பயனுள்ள தளம்.அருமை.தொடருங்கள்........

தங்கம்பழனி said...

மிக உபயோகமான பதிவுகள்.. வேலன் வலைப்பூ.. எல்லாவித தகவல்களையும் அடங்கியுள்ளது.. பயனுள்ளது..!நன்றி! வாழ்த்துக்கள்..! வேலன் சார்..!

பி.நந்தகுமார் said...

வேலன் அண்ணா இது புகைப்படதுறையினருக்கு மட்டுமல்ல! மற்ற அனைவருக்கும் நல்ல பயனுள்ள பதிவு. காங்கேயம் பி.நந்தகுமார்

வேலன். said...

மாணவன் கூறியது...
போட்டோஷாப் தொடர் பதிவா அசத்துங்க சார் அருமை.
நொடியில் ஸ்டாம்ப் சைஸ் போட்டோ ரெடி செய்ய"
நான் எதிர்பார்த்த ஒன்று பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்,

தொடருங்கள்..........
//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
மிகவும் பயனுள்ள பதிவு. ஸ்டுடியோவுக்கு ஓட வேண்டியதில்லை...
//

நன்றி குமார் சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jaleela Kamal கூறியது...
அருமை.
ஆமாம் இனி ஸ்டியோவுக்கு ஓட வேண்டியதில்லை.
பயனுள்ள பதிவுகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கீங்க, வாழ்த்துக்கள்
ஃஃ

நன்றி சகோதரி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

Speed Master கூறியது...
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்,

ஒரு உதவீ
குழந்தைகளுக்கான
வீடு கட்டும் மாதிரி Game இருந்தால் சொல்லவும்
ஃஃ

பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
இன்று தான் உங்கள் தளம் கண்டேன்.மிகவும் பயனுள்ள தளம்.அருமை.தொடருங்கள்........
ஃஃ
நண்பரே...தங்கள் வருகைக்கு நன்றி...தங்கள் பெயரை குறிப்பிட்டிருக்கலேமே..

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தங்கம்பழனி கூறியது...
மிக உபயோகமான பதிவுகள்.. வேலன் வலைப்பூ.. எல்லாவித தகவல்களையும் அடங்கியுள்ளது.. பயனுள்ளது..!நன்றி! வாழ்த்துக்கள்..! வேலன் சார்..!
ஃஃ

நன்றி தங்கம் பழனி சார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
வேலன் அண்ணா இது புகைப்படதுறையினருக்கு மட்டுமல்ல! மற்ற அனைவருக்கும் நல்ல பயனுள்ள பதிவு. காங்கேயம் பி.நந்தகுமார்
ஃஃ

நன்றி காங்கேயம் நந்தகுமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றிங்க

Related Posts Plugin for WordPress, Blogger...