வேலன்:-உங்கள் உயரத்துக்கு ஏற்ற சரியான எடையை-அறிந்துகொள்ள

ஆளைப்பார்த்து எடை போட்டுவிடலாம் என்று சொல்லுவார்கள். நீங்கள் உங்கள் உயரத்து ஏற்ற எடையில் இருக்கின்றீர்களா? எடை உங்கள் உடல்வாகுக்கு அதிகமாக உள்ளதா-அல்லது குறைவாக உள்ளதா? எளிதாக அறிந்துகொள்ளலாம்.இது உண்மையிலேயே ஆள் உயரம்-எடை பார்த்து அவர்கள்பற்றி சொல்லிவிடும் சின்ன சாப்ட்வேர்.குறிப்பிட்ட உயரத்திற்கு குறிப்பிட்ட எடைதான் இருக்கவேண்டும். அது குறைந்தாலும் கஷ்டம். அதிகமானாலும் கஷ்டம்.231 கே.பி. அளவுள்ள இந்த குட்டியூண்டு சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உங்களது உயரத்தை மீட்டர் அல்லது சென்டிமீட்டரிலோ-அடிகணக்கிலோ தேர்வு செய்து கீழே உள்ள விண்டோவில் உங்களது எடையை குறிப்பிட்டு கிலோ கிராமினை தேர்வு செய்யவும்.இதில் முக்கியமாக நீங்கள் ஆணா -- பெண்ணா என்பதனை தேர்வு செய்யவும்.
 பின்னர் இதில் உள்ள Calculate கிளிக் செய்ய உங்களுக்கு உங்கள் எடை சரியாக உள்ளதா - அதிகமா - குறைவா என அதில் உள்ள ஸ்லைடரில் காண்பித்துவிடும்;. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எடை குறைவாக இருந்தால் அதனை அதிகபடுத்தவும். அதிகமாக இருந்தால் குறைக்கவும் பாருங்கள். சின்ன சாப்ட்வேர் என்பதால் இது கம்யூட்டரில் அதிக இடம் எடுத்துக்கொள்ளாது. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

M.R said...

நல்ல உபயோக தகவல் நண்பரே
நான் கூட சமீபத்தில் உடலின் இயல்பான எடை பற்றிய பட்டியல் பதிவில் போட்டிருந்தேன் நண்பரே

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே

கணேஷ் said...

அடடா... இந்த விஷயத்துக்குக் கூட ஒரு சாஃப்ட்வேர் இருக்கா? வியப்புடன் மகிழ்ச்சி! நன்றி நண்பரே...

JesusJoseph said...

நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

சே.குமார் said...

நானும் எம்.எஸ்.எக்செல்லில் இதுபோல ஒரு புரோக்ராம் நண்பரிடம் இருந்து பெற்றேன். அதில் உடல் எடை, நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் சாப்பிட வேண்டும் என்ற விவரமெல்லாம் அழகாக காட்டியது.

உபயோகமான பதிவு நண்பரே.... வாழ்த்துக்கள்.

மச்சவல்லவன் said...

பயனுள்ள பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.

வேலன். said...

M.R said...
நல்ல உபயோக தகவல் நண்பரே
நான் கூட சமீபத்தில் உடலின் இயல்பான எடை பற்றிய பட்டியல் பதிவில் போட்டிருந்தேன் நண்பரே

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே//

நன்றி ரமேஷ் சார்..தங்கள் பதிவில் சென்று உங்களுடைய சார்ட்டை பார்த்தேன். பகிர்ந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
அடடா... இந்த விஷயத்துக்குக் கூட ஒரு சாஃப்ட்வேர் இருக்கா? வியப்புடன் மகிழ்ச்சி! நன்றி நண்பரே...

நன்றி கணேஷ் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

JesusJoseph said...
நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.comஃஃ

நன்றி ஜொசப் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
நானும் எம்.எஸ்.எக்செல்லில் இதுபோல ஒரு புரோக்ராம் நண்பரிடம் இருந்து பெற்றேன். அதில் உடல் எடை, நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் சாப்பிட வேண்டும் என்ற விவரமெல்லாம் அழகாக காட்டியது.

உபயோகமான பதிவு நண்பரே.... வாழ்த்துக்கள்.

உங்களுடைய எக்ஸெல் ப்ரோக்;ராம விருப்பபட்டால் கொடுங்கள் அனைவருக்கும் பயன்படட்டும். நன்றி குமார் சார்...
வாழக் வளமுடன்
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
பயனுள்ள பகிர்வுசார்.
வாழ்த்துக்கள்.

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.

மாதேவி said...

பயனுள்ள பதிவு.
வாரநட்சத்திர வாழ்த்துக்கள்.

ஷைலஜா said...

எடையை அறிந்துகொண்டேன்! நன்றி... நட்சத்திர வாழ்த்துகள்!

மகேஷ் ராஜ் said...

நல்ல இருக்கு
for more news in cenima world
LOGIN TO
http://tamilstar.com/contest/share.php?contest_id=2011122806140812217479192

Related Posts Plugin for WordPress, Blogger...