சில நேரங்களில் காத்துக்கொண்டுஇருப்பதிலேயே தனி இன்பம்.நிச்சயமானபின திருமணத்திற்கு நாள் குறித்திருப்பார்கள்.தினம் தினம் காலண்டரில் நாட்களை எண்ணிவருவோம். விடுமுறையில் ஊருக்கு செல்ல இருப்போம். நாட்களை எண்ணிவருவோம்.வெளியூரிலிருந்து தந்தையோ - மகனோ - கணவரோ -வரலாம். அவர்கள் வரும் நாளை எண்ணிகொண்டிருப்போம்.இந்த மாதிரி அனேகசமயங்களில் நமக்கு கவுண்டவுன் காலண்டர் தேவைப்படும்.பிரசவத்திற்கு காத்திருக்கும் தாய்மார்கள் குழந்தை பிறக்கும் நாளை அவலுடன் எதிர்பார்த்துவருவார்கள. இவ்வாறு அனைத்துதேவைகளையும் நிவர்த்திசெய்யும் ஒரே சாப்ட்வேர் Free Countdown Timer தான. 2 எம்.பி.க்கும் குறைவான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு ஆங்கில புதுவருடத்திற்கு இன்னும் எவ்வளவு நாட்கள்உள்ளது என்கின்ற தகவலுடன் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் அன்றைய தேதிக்கு ஏதாவது நேரம் செட் செய்வதானால் செய்துகொள்ளலாம். உதாரணமாக சமையல் செய்யும்போது - தண்ணீர்மோட்டர் போடும்போது என அலாரம் செட்செய்துகொள்ளலாம்.
குறிப்பிட்ட நாளினை தேர்வு செய்ய இதில் உள்ள Count till date and time கிளிக்செய்யவேண்டும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Date and Time கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான நாளையும் -நேரத்தை நாம் செட்செய்துகொள்ளலாம்.
Sound என்கின்ற விண்டோவின கீழே விதவிதமான இசை தொகுப்புகள் உள்ளது. கால நேரத்திற்கு ஏற்ப இசையை நாம் அலாரமாக செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோ வில் பாருங்கள்.
குறிப்பிட்ட நேரம் வந்ததும் அலாரம நமக்கு தகவலை தெரிவிக்கும்.
வேறு எதற்கெல்லம் இதனை பயன்படுத்தலாம் கீழே கொடுத்துள்ளவற்றை காணுங்கள்.Here are some ideas for countdown clock:
- Expert Tea Steeping
- Appointment Reminder
- Break Timer
- Cooking Timer
- Birthday Countdown Timer
- Graduation Countdown Timer
- Pregnancy Countdown Timer
- Sports Countdown Timer
- Vacation Countdown Timer
- Wedding Countdown Timer
- Christmas Countdown Timer
- Halloween Countdown Timer
- New Year Countdown Timer
- Saint Patrick's Day Countdown Timer
- Thanksgiving Countdown Timer
- Valentine's Day Countdown Timer
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
நீங்கள் சொல்லியிருக்கும் வசதிகள் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் ஒரு வாரம் கழித்து காலை அலாரம் செட் செய்தால், அந்த நேரத்தில் கம்ப்யூட்டர் ஆனில் இருந்தால்தானே இது சத்தம் தரும்? நன்றி நண்பரே...
கணேஷ் said...
நீங்கள் சொல்லியிருக்கும் வசதிகள் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் ஒரு வாரம் கழித்து காலை அலாரம் செட் செய்தால், அந்த நேரத்தில் கம்ப்யூட்டர் ஆனில் இருந்தால்தானே இது சத்தம் தரும்? நன்றி நண்பரே...//
கம்யூட்டரிலேயே மெய்மறந்து வேலை செய்பவர்களுக்காகதான் இந்த அலாரம் பயன்படும். தங்கள் வருகைக்கு நன்றி சார்...
வாழக் வளமுடன்
வேலன.
Post a Comment