வேலன்-மிக துல்லியமான உலக கெடிகாரம்.

நமது கணிணியில் பயன்படுத்த விதவிதமான கெடிகாரங்கள் வைத்திருப்போம். ஆனால் வித்தியாசமான இந்த கெடிகாரம்பல நாட்டினினையுடைய சரியான நேரத்தை காண்பிப்பதுடன் மேலும் பல சிறப்பு வசதிகளை தன்னிடத்தில் கொண்டுள்ளது. இணைய இணைப்பு இல்லாதபோதும் சிறப்பாக செயல்படுவது இதன் சிறப்பு. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை நமது கணிணியில் நிறுவி இதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பணியின் காரணமாக நாம் வெளியிடங்களில் வேலை செய்வோம். அதைப்போல் நமக்கு வேண்டிய உறவினர்கள் -நண்பர்கள் வேறு நாட்டில் வேலை செய்வார்கள். நமது நாட்டின் நேரம் - அங்கு அவர்கள் நாட்டின் நேரம் தெரிந்துகொண்டால் அவர்களிடம் பேச நமக்கு வசதியாக இருக்கும்.இதில் நாம்  இருக்கும் நாட்டின் பெயரையும் -நகரத்துப்பெயரையும் கொடுத்துவிட்டு-விரும்பும் நாட்டின் பெயரையும் - நகரத்துப்பெயரையும் கொடுத்தால் நமக்கு
நொடியில் வித்தியாசம் காண்பிக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் 20 அலார நேரங்களை செட்செய்துகொள்ளலாம். அதைப்போல விதவிதமான அலார ஒலிகளையும் விரும்பும் பாடல்களையும் செட்செய்துகொள்ளலாம். அலாரம் ஒலிக்கும் நேரம் - காலம் - கிழமை என செட்செய்ய இதில் வசதி உள்ளது.
இதில் உள்ள காலண்டரில் நமது நிகழ்சிகளை -குறிப்பாக பிறந்த நாள் -திருமணநாள் போன்றவற்றை குறித்து வைத்துக்கொள்ளலாம் கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் கொடுத்துள்ள FEED READER படிப்பதுமட்டும் அல்லாது நமது விருப்பமான Feed Reader இதில் சேர்த்துக்கொள்ளலாம்.தேவையான நாட்டின் கெடிகாரத்தை வைத்துக்கொள்வதுடன் வேண்டாத சமயம் மறையவும் வைக்கலாம்.
இதில் தோன்றும் கெடிகாரத்தை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.

நாம் தேர்வு செய்யும் நாட்டின் மொத்தவிவரமும் இதில் கிடைத்துவிடும். மேலும் அங்கு சூரிய உதய நேரம்.மறையும் நேரம். அடுத்த அமாவாசை -பௌர்ணமி வரும் நாட்கள் என விவரங்கள் கொடுத்துள்ளார்கள்.நாம் விரும்பும் நாட்டில் அப்போது பகலா - இரவா என எளிதில கண்டுகொள்ளலாம்.
அதைப்போல நாம் விரும்பும் கெடிகார டிசைன் - அளவு என அதைத்தையும் நாம் விருப்பத்திற்கு எற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். கிழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
டிசைன் மாற்றிய கெடிகாரம் கீழே-
அதைப்போலவே விரும்பிய நாட்டினையும் இந்த லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நகரத்துபெயரை வைத்து நேரத்தை எளிதில் காணலாம்.
பயன்படுத்திப்பாருங்க்ள. கருத்தினை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்,
வேலன்.






பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

http://rkguru.blogspot.com/ said...

பதிவு அருமை........வாழ்த்துகள்

வேலன். said...

rk guru கூறியது...
பதிவு அருமை........வாழ்த்துகள்ஃஃ//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

வணக்கம், நான் தங்களின் பதிவுகளை PDF ஆக தறவிறக்கம் செய்யம் பொழுது
"There was an error processing Page, There was a Problem reading this document (135)
என வருகிறது. இதனால் என்னால் தங்களின் பதிவுகளை PDF ஆக தறவிறக்கம் செய்து படிக்க இயலவில்லை.எவ்வாறு சரிசெய்வது,தயவு
செய்து விளக்கம் தரவும். நன்றி....

aravind said...

வணக்கம், நான் தங்களின் பதிவுகளை PDF ஆக தறவிறக்கம் செய்யம் பொழுது
"There was an error processing Page, There was a Problem reading this document (135)
என வருகிறது. இதனால் என்னால் தங்களின் பதிவுகளை PDF ஆக தறவிறக்கம் செய்து படிக்க இயலவில்லை.எவ்வாறு சரிசெய்வது,தயவு
செய்து விளக்கம் தரவும். நன்றி....

ஜெய்லானி said...

தேவையான ஒன்னுதான் பாஸ்.

பொன் மாலை பொழுது said...

மாப்ஸ் வழக்கம் போல பிரமாதமான பதிவு நன்றி.

பொன் மாலை பொழுது said...

அது என்ன ஜெயிலா ? சொல்லுங்களேன்

சசிகுமார் said...

வழக்கம் போல நல்ல பதிவு நண்பரே

Jey said...

நன்றி வேலன். என் கணிணியில் பதிவிறக்கியுள்ளேன்.

'பரிவை' சே.குமார் said...

பிரமாதமான பதிவு.

வேலன். said...

aravind கூறியது...
வணக்கம், நான் தங்களின் பதிவுகளை PDF ஆக தறவிறக்கம் செய்யம் பொழுது
"There was an error processing Page, There was a Problem reading this document (135)
என வருகிறது. இதனால் என்னால் தங்களின் பதிவுகளை PDF ஆக தறவிறக்கம் செய்து படிக்க இயலவில்லை.எவ்வாறு சரிசெய்வது,தயவு
செய்து விளக்கம் தரவும். நன்றி..//


எனக்கு சரியாகதான் வந்தது நண்பரே..எதற்கும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கின்றேன்.
நன்றி

வாழ்க வளமுடன்.
வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம் போல நல்ல செய்திகள்...

suresh said...

Thankyou velan

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அருமையான பதிவு வேலன் சார்..
மிக்க நன்றி....

Unknown said...

Great Post . I want to contact you. Can you please contact me through my email:- info@brooto.com

சரவண பெருமாள் said...

வணக்கம் வேலன் அவர்களே, மிகவும் அருமையான பதிவுகளை வெளியிடுகிறீர்கள்..... நன்றி..... அப்புறம் ஒரு வினா, புவியியல் அமைப்பில் உள்ள GMT (Greenwich Mean Time), latitude and longitude பற்றியும் மற்றும் வேறு ஏதேனும் புவியியல் அமைப்பு பற்றிய கட்டுரை அல்லது மென்பொருள் குறித்து அறிந்தால் எழுதவும்......

Related Posts Plugin for WordPress, Blogger...