வேலன்:-ரூபாயின் மதிப்பை எண்ணால் அறிந்துகொள்ள-Rupees 2 Word

குறைந்த அளவு பணம் இருக்கையில் அதற்கான தொகையை நாம்எழுத்தால் எழுதிவிடலாம். அதே அளவு பணம் அதிகமாக இருக்கையில் அதனை எழுத்தால் எழுத நாம் தடுமாறவேண்டிவரும்.அந்த குறையை போக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களக்கு கீழ்கண்ட விண்டோ  ஓப்பன் ஆகும்.
 இதில் ரூபாயின் மதிப்பை எண்ணிலால் தட்டச்சு செய்து கீழே உள்ள பைண்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கான தொகை கிடைக்கும்.அதுபோல டாலருக்கான மதிப்பை அறிந்துகொள்ள இதில் உள்ள டாலர் ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும்.அன்றைய டாலர் மதிப்பை கீழே உள்ள கட்டத்தில் நிரப்பவும். இப்போது உங்களுக்கு எவ்வளவு ரூபாய்க்கு டாலர் மதிப்பு தேவையோ அந்த எண்ணை தட்டச்சு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சின்னதனமான சாப்ட்வேர் ஆக இருக்கலாம். ஆனால் சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பதுபோல இதுவும் உங்களுக்கு பயன்படலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...