வேலன்:-புகைப்படங்களை மொத்தமாக அளவினை குறைக்க-Mwisoft image resizer

சில சமயங்களில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை மற்றவர்களுடன் இணையம் மூலம் பகிர்ந்துகொள்ள விரும்புவோம். அவ்வாறு பகிர்ந்துகொள்ளும் சமயம் நம்மிடம் உள்ள புகைப்படங்கள் அதிக பிக்ஸல் உடன் அளவும் அதிகமாக இருக்கும்.மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நேரம் ஆவதுடன் சிரமமும் ஏற்படும். இந்த குறைகளை நிவர்த்தி செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. நம்மிடம் உள்ள புகைப்படங்களை நாம் மொத்தமாக நாம் விரும்பும் அளவிற்கு மாற்றி கொள்ளலாம். இதன பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இனஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் புகைப்படங்களை டிராக் & டிராப் முறையிலோ அல்லது போல்டரை தேர்வு செய்தோ எடுத்துக்கொள்ளலாம்;.இதில் தேவையான அளவு பிக்ஸல்தான் தேவையென்றால் அந்த அளவினை குறிப்பிடலாம்.(சில நிறுவனங்களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விண்ணப்பம் அனுப்புகையில் நமது புகைப்படம் இந்த பிக்ஸல் அளவில்தான் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவார்கள்.அவ்வாறான சமையங்களில் இந்த ஆப்ஷன் நமக்கு உதவும்) புகைப்படத்தின் மொத்த அளவில் இந்தனை சதவீதம்தான் வேண்டும் என்றாலும் நாம் சதவீதத்தின் அளவிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
புகைப்படங்கள் சேமிப்பாகும் இடத்தினையும் நிர்ணயித்துகொண்டபின்னர் இதில் உள்ள ரீசைஸ் பட்டனை கிளிக் செய்யவும். சிலநிமிடங்கள் காத்திருந்தபின்னர் உங்களுக்கான புகைப்படங்கள் நீங்கள் விரும்பிய அளவில் வந்துள்ளதை காணலாம். இதன்மூலம் அதிகஅளவிலான புகைப்படங்களை சிலநிமிடங்களில் நாம் தரம் குறையாமல் அளவினை குறைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...