வேலன்:-மினிடூல் மூவிமேக்கர் -MiniTool Movie Maker.

நம்மிடம் உள்ள வீடியோ பைல்களைகொண்டு ஆடியோ -டைட்டில்-சிறப்பு எபெக்ட்க்கள் கொண்டு வருவதற்கு இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் இந்த மென்பொருளை நாம் பயன்படுத்தும் வீடியோ டெமொ காண்பித்துள்ளார்கள்.
இந்த மென்பொருளை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் டிராக் அன்ட் டிராப் முறையில் தேவையான வீடியோ பைலினை இழுத்து விடவும்.இதில் உள்ள Transtion கிளிக் செய்ய கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான டிரான்சிஸ்டன் கிளிக் செய்ய டெமோ வீடியோ ஒவ்வொன்றாக நமக்கு ப்ளே ஆகும்.
தேவையானதை தேர்வு செய்து டபுள் கிளிக்செய்தால் நமக்கு வீடியோவானது டிஸ்பிளேவில் வந்து அமர்ந்துகொள்ளும். வீடியோவின் ஒவ்வொரு இடைவெளியிலும் நாம் இந்த டிரான்சிக்ஸனை பொருத்திக்கொள்ளலாம்.
இதில் உள்ள எபெக்ட் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில்உள்ள டைட்டில் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். தேவையான டெக்ஸ்ட் எபெக்ட் நாம்  தேர்வு செய்திட டிஸ்பிளே விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள மோஷன் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வீடியோ ஒன்றிலிருந்து மற்றது எந்த திசையில் எந்த வாட்டத்தில் நகர வேண்டுமோ அதனை தேர்வு செய்திடலாம். 
தேவையான ஆடியோ பைல்களை சேர்த்திடலாம். இறுதியாக ப்ளே செய்து பார்க்கவும்.
இறுதியாக இதில் உள்ள இம்போர்ட் கிளிக் செய்திட உங்களுக்கு நீங்கள் பிசி அல்லது போன் என்கின்ற ஆப்ஷனை தேர்வு செய்திடலாம். பிசி என்றால் எந்த வகை பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வு செய்திடலாம்.கணிணியில் சேமித்தஉடன் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.
 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

vetha said...

good will try and comment later.

Related Posts Plugin for WordPress, Blogger...