அடிக்கடி பயன்படுத்தும் புகைப்படங்கள்.அப்ளிகேஷன்கள்.வீடியோக்கள். இணையதள முகவரிகள் என அனைத்தையும் நாம் புக்மார்க்காக சேமித்துவைத்துக்கொள்ளளலாம். இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add BookMark கிளிக்செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.இதில் புக்மார்க்காக உங்கள் கணிணியின் ஹார்ட்டிஸ்க்கிலிருந்து தகவல்களை பெறபோகின்றீர்களா அல்லது இணையத்தில் உள்ள லிங்க் கிலிருந்து தகவல்களை பெறபோகின்றீர்களா என முடிவு செய்யவும்.
தேவையான தகவல்களை பதிவு செய்தவுடன் உங்கள் புக்மார்க்கு உங்களுக்கு விருப்பமான பெயரினை கொடுக்கவும்.
உங்களுடைய புக்மார்க் பகக்ங்கள் தயார் இப்போது உங்களுக்கு எதனை திறக்க விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்து இதில் உள்ள Run கிளிக்செய்தால் போதுமானது. இங்களுக்கான புக்மார்க் பக்கமானது உடனடியாக திறந்துகொள்ளும். ப்வ்சரில் சேமிக்கபடும் புக்மார்க்கானது உங்களுக்கு இணைய லிங்க் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் இதில் இணைய இணைப்புக்கான லிங்க் மட்டுமல்லாது உங்கள் ஹார்ட்டிரைவிலிருந்தும் தகவல்களை பெறலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment