வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.

நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. மேலும் வீடியோ பைல்களை டவுண்லோடு செய்திடவும்,ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்திடவும் இதனை பயன்படுத்தலாம். இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

பைல்களை தேர்வு செய்வதன் மூலமோ டிராக் அன்ட் டிராப் முறையிலோ நாம் வீடியோ பைல்களை தேர்வு செய்திடலாம்.வீடியோ பைலினை தேர்வு செய்ததும் உங்களுக்கு தேவையான பார்மெட்டினை தேர்வு செய்திடவும். இறுதியாக இதில் உள்ள கன்வர்ட் கிளிக் செய்யவும்.
கன்வர்ட் ஆகி முடிந்ததும் உங்களுக்கு சக்ஸஸ் என்கின்ற தகவல் கிடைக்கும். நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ நீங்கள் விரும்பிய பார்மெட்டில் இருப்பதனை காணலாம்.

இதில் மேல்புறம் மூன்று டேப்புகள் கொடுத்துள்ளார்கள். வீடியோ கன்வர்ட்டர். வீடியோ டவுண்லோடர் மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டர் என மூன்று டேப்புகள் இருக்கும். இதில் வீடியோ கன்வர்ட்டரை பார்த்தோம். இப்போது நடுவில் உள்ள வீடியோ டவுண்லோடரை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

யூடியூப் வீடியோ தளம் உங்களுக்கு ஓப்பன் ஆகும்.தேவையான வீடியோவினை நீங்கள் டவுண்லோடு செய்திடலாம். அதுபோல மூன்றாவதாக உள்ள ரெக்கார்டரினை கிளிக் செய்யவும்.
நீங்கள்டெக்ஸ்டாப்பில் காண்கின்ற வீடியோவினை நாம் ரெக்கார்ட் செய்திடலாம். அதுபொல இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

 இதில் கன்வர்ட்.டவுண்லோடு மற்றும் ரெக்கார்ட் என மூன்று டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள கன்வர்ட் பட்டனை கிளிக்செய்து நீங்கள் எத்தனை வீடியோக்களை ஒரே சமயத்தில் கன்வர்ட் செய்திட விரும்புகின்றீர்களோ அந்த எண்ணிக்கையை தேர்வு செய்திடலாம். அதுபொலவே டவுண்லோடு மற்றும் ரெக்கார்ட் செட்டிங்ஸ் அமைத்திடலாம்.ஒரே மென்பொருளில் மூன்றுவிதமான பயன்பாடு உங்களுக்கு பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...