வேலன்:-புகைப்படங்களில் விமர்சனம் செய்திட-Mwisoft

புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சந்தர்பங்களிலிலும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் வெளிப்படுத்துகின்றது. அவ்வாறு எடுக்கும் புகைப்படங்கள் எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்டது யார் உடன் கலந்துகொண்டது போன்ற நிகழ்வுகளை நாம் சுவையான விமர்சனங்களை உடன்சேர்த்துக்கொள்ளலாம். மீண்டும் அந்த பழைய நினைவுகளை அசைபோடும் சமயம் அந்த விமர்சனங்கள் நமக்கு புது உற்சாகத்தினை தரும். அவ்வாறு புகைப்படங்களில் விமர்சனங்களை உடன் சேர்க்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுக்கான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள். இதில் கீழ்உள்ள பெட்டியில்உங்களுக்கான விமர்சனங்களை வேண்டிய பாண்டில் -வேண்டிய அளவில் -வேண்டிய நிறத்தில் தட்டச்சு செய்யுங்கள். 
இறுதியாக சேவ் செய்துவெளியேறுங்கள். இனி அடுத்துள்ள புகைக்படம் -விமர்சனம் என புகைப்பட போல்டர் முழுவதும் தட்டச்சு செய்துவிடுங்கள். இப்போது அந்த புகைப்படங்களை நீங்கள் திறந்துபார்த்தால் உங்களுக்கான புகைப்படங்கள் விமர்சனங்களுடன் உங்களுக்கு காத்திருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...