பள்ளிகளில் படிக்கும் சமயம் டைம்டேபிள் பயன்படுத்திஉள்ளோம். அதிகமாக நோட்டு புத்தகங்கள் வாங்கும் சமயம் ;இலவசமாக டைம்டேபிளையும் கொடுப்பார்கள். நாம் எந்த எந்த ப்ரியடுக்கு எந்த எந்த சப்ஜேட் என எழுதிவைத்துக்கொள்ளுவோம் அதுபோல கணிணியில் டைம்டேபிளாக இதனை கொடுத்துள்ளார்கள்.இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இனஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இதில் ஒரு வாரத்திற்கான டைம்டேபிள் திங்கள் முதல் ஞரயிறு வரை கொடுத்துள்ளார்கள். எந்த கழமை தேவையோ அதனை தேர்வு செய்யவும். அதில் when.at.what. என மூன்று காலங்கள் கொடுத்துள்ளார்கள். அதில் நமது தேவையை நிரப்பிக்கொள்ளலாம்.புதன்கிழமை என்ன வேலை எந்த நேரத்திற்கு செய்யவேண்டும் என இதில் குறித்துவைத்துவிட்டால் அந்த கிழமையில் அந்த வேலையை செவ்வனே முடித்துவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment