ஆடியோபைல்களை வேண்டிய பார்மெட்டுக்கும் வேண்டிய தரத்திற்கும் கொண்டுவர இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் பார்மெட் மாற்றவேண்டிய ஆடியோ பைலினை தேர்வு செய்யவும் பின்னர் இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும். இதில் MP3.3GP.WMV,AOB.MPG,.WAV..MKV என எந்த பார்மெட் வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும். இதில் நீங்கள் ஆடியோவினை தரத்தினை உயர்த்திடவும் குறைத்திடவும் செய்யலாம்.
அனைத்து செட்டிங்ஸ் முடிந்ததும் இதில் உள்ள என்கோடிங் கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் விரும்பிய பார்மெட்டில் உங்கள் ஆடியோ மாறியிருப்பதை நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
0 comments:
Post a Comment