கணிணியில் பணிபுரிகையில் சில பைல்கள்.போட்டோக்கள்.வீடியோக்கள்.டாக்குமேண்டுகள் இரண்டுமுறைக்கு மேல் ஹார்ட்டிஸ்க் டிரைவில் பதிவிட்டுவிடுவோம். அவ்வாறு பதியவிட்ட பைல்கள் சேர்ந்து ஹார்ட்டிஸ்க் இடத்தினை அடைத்துக்கொள்ளும். அவ்வாறாக சேரந்துள்ள டூப்ளிகேட் பைல்களை கண்டுபிடித்து டெலிட் செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பிக்கும் குறைவாக உள்ள இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில மேற்புறம் நீங்கள் டூப்ளிகேட் கண்டுபிடிக்கவேண்டிய டிரைவினை தேர்வு செய்யவும். அடுத்துள்ள டேபினை கிளிகசெய்திட கீழ்கண்ட விண்டோ வரும். இதில் ஒரே மாதிரியாக உள்ள பைல்கள்.ஒரே அளவுள்ள பைல்கள். ஒரே அளவிலும் பெயரிலும் உள்ள பைல்கள் என எதுதேவையோ அதனை தேர்வு செய்யவும்.பின்னர் இதில் உள்ள பைண்ட் கிளிக் செய்ய உங்களுக்கு சில நிமிட காத்திருப்பிற்குபின்னர் கீழ்கண்ட வாறு விண்டோவில டூப்ளிகேட் பைல்கள் ;தெரியவரும்.
இதனை ஒவ்வொன்றாக பார்த்து எதுதேவையில்லையோ அதனை மொத்தமாக தேர்வு செய்து டெலிட் செய்துவிடலாம்.இதன் மூலம் நமக்கு டூப்ளிகேட் பைல்கள் அழிவதுடன் ஹார்ட்டிஸ்கிலும் கணிசமான இடம் கிடைக்கும. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment