வேலன்:-தேவையற்ற மின்அஞ்சல்களை இன்பாக்ஸிற்கு வராமல் தடுத்திட-Lock unwanted e-mail

புத்தகக்கண்காட்சி.பொருட்காட்சி மற்றும் சில பொருட்களை வாங்கும் சமயம் நமது இமெயில் முகவரியை கேட்பார்கள். அவ்வாறு நாம் கொடுக்கும் முகவரிகளை சிலர் அவர்களுடைய விளம்பரங்களை வெளியிட பயன்படுததிக்கொள்வார்கள். சில சமயம் நமக்கு பயன்பட்டாலும் பெரும்பாலான சமயங்களில் நமக்கு அது எரிச்சலையே ஏற்படுத்தும். அவ்வாறு தேவையில்லாமல் வரும் இமெயில்களை நமது இன்பாக்ஸில் வராமல் நேரடியாக டெலிட் செய்திட நமது இமெயிலில் சின்ன செட்டிங்ஸ் செய்தால் போதுமானது. அதனை எவ்வாறு செய்யலாம் என காணலாம். முதலில் உங்கள் இமெயிலினை திறந்துகொள்ளுங்கள்.அதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து வரும் விண்டோவில் பில்டர் கிளிக் செய்யுங்கள். அதில் கிரியேட் நியூ பில்டர் கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு கீழே உள்ள விண்டோ ஒப்பன் ஆகும்.
 அதில் யாருடைய இமெயில் நமக்கு வரவேண்டாம் என நினைக்கின்றோமோ அவர்களுடைய முழு முகவரியையும் தட்டச்சு செய்யுங்கள். மற்ற விவரங்கள் தேவைப்பட்டால் தட்டச்சு செய்து பின்னர் கிரியேட் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நிறைய ஆப்சன்கள் கொடுத்திருப்பார்கள்.தேவையானதை நாம் தேர்வு செய்யலாம். உங்களுக்கு நிரந்தரமாக டெலிட் செய்தவிடவேண்டமென்றால் டெலிட் பட்டனை கிளிக் செய்து இறுதியாக கிரியேட் பில்டர் கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது பில்டர் விண்டோவில் நீங்கள் தேர்வு செய்த இமெயில் முகவரி இருக்கும் தேவைப்பட்டால் இந்த வசதியை நீக்கிவிட்டு எப்போதும் போல நமக்கு இன்பாக்ஸில் மெயில் வரவழைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...