இணையத்தில் நாம் தனிப்பட்ட கணக்கில் நுழைந்திட நமது தனி கணக்கிற்கு பாஸ்வேரட் முக்கியமானது. அந்த பாஸ்வேர்டினை கடினமாக அமைத்தால் தான் மற்றவர்கள் நமது கணக்கில் உள் நுழைய முடியாது. நமது பாஸ்வேர்ட் எவ்வளவு வளிமையானது என்பதனையும் வளிமையான பாஸ்வேர்டினையும அமைத்துக்கொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் ஏற்கனவே பாஸ்வேர்ட் பயன்படுத்துவராக இருந்தால் இதில் இரண்டாவதாக உள்ள Strength Checker கிளிக் செய்து நமது பாஸ்வேர்டினை உள்ளீடு செய்யவும். இப்போது உங்கள் பாஸ்வேர்டின் உறுதி தன்மை தெரியும். நான் தமிழ் கம்யூட்டர் என பாஸ்வேர்ட் கொடுத்தேன். அதன் உறுதி தன்மையை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்கள் புதியதான பாஸ்வேர்ட உருவாக்குவதானாலும் சரி..இருக்கும் பாஸ்வேர்டின் உறுதி தன்மையை அறிந்துகொள்ளவதானாலும் சரி. இந்த சின்ன சாப்ட் வேரினை பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment