புதுவருடம் பிறந்ததும் அனைவரும் டைரி கேட்பார்கள். நாமும் புதுவருடத்திற்கு இந்த கம்யூட்டர் டைரியை கொடுக்கலாம். 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..
இதில் உங்களுக்கான காலண்டர் இடதுபுறம் இருக்கும். இதில் அன்றைய தேதி சிறிய முக்கோணத்தில் உங்களுக்கு தெரியவரும். இதில் உள்ள டைரி பக்கத்தில் உங்களுக்கு தேவையான தகவல்களை உள்ளீடு செய்யலாம்.டைரியின் பக்கத்தில் அன்றைய நிகழ்வின் புகைப்படத்தினையும் டாக்குமெண்ட் இருந்தால் டாக்குமெண்டையும். ஆபிஸ் பைல்களையும். பிடிஎப்பைல்களையும் இணைக்கலாம். அந்த நிகழ்வின் தகவல்களையும் நீங்கள் பதியவைக்கலாம்.
தகவல்கள் மற்றவர்கள் பார்க்காமல் இருக்க இதில் பாஸ்வேர்ட் வசதியும் கொடுத்துள்ளார்கள். இதன்மூலம் மற்றவர்கள் நமது தனிப்பட்ட தகவல்களை பார்வையிடுவதை தவிர்க்கலாம்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து ஆரம்ப தேதி மற்றும் நேரங்களை செட் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
டைரியின் பக்கத்தின் நிறத்தினையும் பாண்ட் அளவினையும் நாம் வேண்டிய அளவிற்கு செட்செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தகவல்களையும்.புகைப்படத்தினையும் உள்ளீடு செய்த டைரியின் பக்கத்தினை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள. மேலும் இந்த டைரியினை இம்போர்ட் மற்றும் ;எக்ஸ்பேர்ட் செய்யலாம்.
புகைப்படங்கள். டாக்குமெண்ட்கள் இணைத்துக்கொள்ளக்கூடிய வசதிகளுடன் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்ககும் வசதி உள்ளதால் இந்த டைரி யை நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
வெகு காலமாக இப்படி ஒரு ஆப் தேடிக் கொண்டிருந்தேன். மிக்க நன்றி.
Blogger Ram said...
வெகு காலமாக இப்படி ஒரு ஆப் தேடிக் கொண்டிருந்தேன். மிக்க நன்றி.
மகிழ்ச்சி சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.
Post a Comment