நம்மிடம் உள்ள புகைப்படங்களை கொண்டு புகைப்பட ஆல்பம் தயாரிக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. திருமணம்.பிறந்தநாள்.சுற்றுலா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை புகைப்படமாக நாம் எடுத்துள்ளதை ஆல்பமாக தயாரிக்கலாம்.8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் புதியதாக புகைப்பட ஆல்பம் தயாரிக்க இருப்பதால் இதில் உள்ள நியூ என்பதனை கிளிக் செய்யவும். இப்போது வரும் விண்டோவில் உங்களுக்கான புகைப்பட அளவினை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அளவினை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள டெம்ப்ளேட் டிசைனை தேர்வு செய்யுங்கள்.உங்களிடம் உள்ள புகைப்படங்களை இந்த ஆல்பத்தில் சேருங்கள்.இப்போது இந்த விண்டோ கிடைக்கும்.
இதன் வலதுபுறம் தீம் என்கின்ற டேப் கொடுத்துள்ளார்கள் அதில் Arrange.Shadows.Frames.Backround என நான்கு விதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
புகைப்படங்கள் ஓழுங்குபடுத்துதல்.ஷேடோ உருவாக்குதல். ப்ரேம்கள் கொண்டுவருதல்.பின்னணி புகைப்படங்கள் கொண்டுவருதல் என நம் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்தபின்னர் அதனை நாம் விரும்பிய பார்மெட்டில் சேமித்துவைத்துக்கொள்ளலாம். நம்மிடம் ப்ரிண்டர் இருப்பின் புகைப்பட ஆல்பத்தினை பிரிண்ட் செய்து வைத்துக்கொள்ளலாம். உபயோகிக்க எளிதாக உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment