வேலன்:- வீடியோ பைல்களில் வேண்டிய மாற்றங்கள் செய்திட - Allavsoft

இணையத்தில் இருந்து வீடியோ பைல்களை பதிவிறக்கம் செய்திடவும்.தேவையான பகுதியை கட் செய்திடவும. சிறு சிறு வீடியோ பைல்களை ஒரே பைல்களாக மாற்றிடவும். வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த மென்பொருள்' பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நீங்கள் ;பதிவிறக்கம் செய்யவேண்டிய வீடியொ பைலின் யூஆர்எல் முகவரியை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்திடவும்.உங்களுக்கு வேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்திட்ட வின்னர் இதன் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்திடவும்.
 இதில் உள்ள கன்வர்ட் டேபினை கிளிக் செய்தததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உங்கள் வீடியொவின் பதிவிறக்கம் செய்யவேண்டிய பார்மெட்டினை தேர்வு செய்திடவும். பின்னர் வீடியொவில் எந்த பகுதியிலிருந்து எந்த பகுதி வேண்டுமோ அதனை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள கன்வர்ட் ப்ட்னை கிளிக் செய்திடவும்.


உங்கள் வசம் உள்ள வீடியோ பைல்களை ஒரே பைல்களாக மாற்றிடவும் இதில் உள்ள மெர்ஜ் டேபினை கிளிக செய்திடவும். பின்னர் உங்கள் கணினியின் ஹ◌ார்ட்டிஸ்கிலிருந்து தேவையான வீடியோ பைல்களை தேர்வு செய்திடவும். 



பைல்களை முன்பின் மாற்றுவதோ நீங்குவதோ இதில் செய்திடலாம். பின்னர் கடைசியாக இதில் உள்ள மெர்ஜ் பட்டனை கிளிக் செய்திடவும். சில நிமிடங்களில் உங்களுக்கான வீடியோ பைல்களானது ஒரே பைலாக மாறியிருப்பதை காணலாம். இதில் உள்ள ஆக்டிவிடி டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். ;இதில் நீங்கள் இந்த மென்பொருளில் செய்திட்ட விவரம் எல்லாம் தெரியவரும். இதன் மூலம் உங்கள் வீடியோபின் ;தற்போதைய நிலவரத்தினை நீங்கள்அறிந்து;கொள்ளலாம்.
இது ட்ரையல் விஷன் பதிப்பு ஆகும். உங்களுக்கு இந்த மென்பொருள் பிடித்திருந்தால் முழு பதிப்பையும் வாங்கிகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...