வேலன்:-பிடிஎப் பைலின் பக்கங்களை லாக் செய்திட - PDF PAGE LOCK.

பிடிஎப் பைல்களில் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் நாம் லாக் செய்து வைத்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இணையதளம் செல்ல 
இங்கு கிளிக்  செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.


h
இதில் நீங்கள் பாதுகாக்கவேண்டிய பிடிஎப் பைலினை தேர்வு செய்திடவும். பிடிஎப் பைல்களில் உள்ள பக்கங்கள் உங்களுக்கு பக்கத்து விண்டோவில் தெரியும்.தேவையான பக்கத்தினை தேர்வு செயதிடவும்.
பின்னர் கீழே உள்ள லாக என்கின்ற டேபினை கிளிக் செய்திடவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
அதில் நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை உள்ளீடவும். பின்னர் சேவ் செய்து வெளியேறவும்.
இப்போது நீங்கள் லாக் செய்தபக்கங்கள் லாக்ஆகிவிட்டது என தெரியவரும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.


இப்போது சேவ் செய்து வெளியேறவும். இப்போது நீங்கள் உங்கள் பிடிஎப் பைலினை திறந்து பார்க்கையில் நீங்கள் லாக்செய்த பக்கமானது பூட்டு சிம்பளுடன் இருப்பதை காணலாம்.


இதனை மீண்டும் நீங்கள் அன்லாக் செய்யவிரும்பினால் மீண்டும் இந்த மென்பொருளை திறந்து பைலினை ஒப்பன் செய்யவும். பைலினை திறக்க முற்படுகையில் உங்களிடம் கடவுச்சொல் கேட்கும். அதனை உள்ளீடவும். 
பின்னர் அன்லாக் என்பதனை கிளிக் செய்திட நீங்கள் லாக் செய்த பக்கமானது திறந்து பார்க்க ஏதுவாக இருக்கும். அதுபோல நாம் பைலினை ஹைட் செய்தும் வைக்கலாம். இதனால் பிடிஎப் பைலானது முற்றிலும் மறைந்துவிடும். மீண்டும் தேவைப்பட்டால் நீங்கள் இதனை கொண்டுவரலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...