வழக்கமாக நாம் போல்டருக்கு -டாக்குமெண்டடுகளுக்குதான் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்போம். ஆனால் இந்த மென்பொருளில் நாம் எந்த ஒரு அப்ளிகேஷனையும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். இதனால் மற்றவர்கள் நமது அப்ளிகேஷனை திறந்து பயன்படுத்த இயலாது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவைப்படும் அப்ளிகேஷனை தேர்வு செய்திடவும். நான் நோட்பேடினை தேர்வு செய்திட்டேன்.
பின்னர் இதில் உள்ள பாஸ்வேர்ட் ஆப்ஷனை தேர்வு செய்திடவும்.
பாஸ்வேர்ட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவைப்படும் பாஸ்வேர்டினை இரண்டுமுறை தட்டச்சு செய்திடவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் தேவைப்படும் அப்ளிகேஷனை தேர்வு செய்திடவும். நான் நோட்பேடினை தேர்வு செய்திட்டேன்.
பின்னர் இதில் உள்ள பாஸ்வேர்ட் ஆப்ஷனை தேர்வு செய்திடவும்.
பாஸ்வேர்ட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவைப்படும் பாஸ்வேர்டினை இரண்டுமுறை தட்டச்சு செய்திடவும்.
ஓ.கே.கொடுத்து வெளியேறவும். இப்போது நீங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டுள்ள நோட்போடினை திறக்க முயல்கையில் உங்களுக்கு அதனை திறப்பதற்கான பாஸ்வேர்டினை கேட்கும்.
சரியான பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டபின் உங்களுக்கான அப்ளிகேஷன் திறக்கப்படும். நீங்கள் அதனை பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள ;;கணினியில் உள்ள எந்த ஒரு அப்ளிகேஷனையும் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்;;
வாழ்கவளமுடன்
வேலன்.
1 comments:
வணக்கம்.. புதிய சாப்ட்வேர்களை எனக்கு தெரியாமல் மற்றவர்கள் எனது கணிணியில் இன்ஸ்டால் செய்வதை தடுக்கும்படி செய்ய சாப்ட்வேர் இருந்தால் சொல்லுங்ககள். மிகவும் பயன்படும். நன்றி.
Post a Comment