வேலன்:-பிடிஎப் ரோட்டேட்டர்.-PDF Page Rotator.

சில பைல்களை புகைப்படங்களை நாம் பிடிஎப் பைல்களாக மாற்றும் சமயம் சில பக்கங்கள் மாறி இருக்கும். அவ்வாறு மாறிஇருக்கும் பிடிஎப் பக்கங்களை நாம் நமக்கு; தேவையான கோணத்திற்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம்செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் நமக்கு தேவையான பிடிஎப் பைலினை டிராக் அன்ட் டிராப் முறையில் தேர்வு செய்திடவும். மேலும் உங்களுக்கு உங்களது பிடிஎப் பைலானது இதன் பக்கத்தில் தெரியவரும. இதில் 0.90.180.270 என கோணங்கள் அளவு கொடுத்திருப்பார்கள் அதுபோல எந்த எந்த பக்கங்களை நீங்கள் மாற்ற வேண்டுமோ அதனை தேர்வு செயதிடலாம். அல்லது அனைத்து பக்கங்களையும் மாற்றவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். தேவையானதை தேர்வு செய்து பின்னர இதில் உள்ள ரோட்டேட் என்பதனை கிளிக் செயதிடவும்.
 பைலினை சேமிக்க விரும்பும்இடத்தினை தேர்வு செய்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்கள் பிடிஎப் பைலானது நீங்கள் விரும்பியவாறு மாறியிருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...