வேலன்:-பைல்கள்-டெக்ஸ்ட்டினை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க -Encrypt-Care

பைல்கள் மற்றும் டாக்குமெண்ட்டுகளை கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.உங்களுக்கு கடவுச்சொல் கேட்கும். கடவுச்சொல்லினை உள்ளீடவும்.
இதில் பைல்களோ புகைப்படங்களோ போல்டர்களோ தேர்வு செய்திடவும். இதில் உள்ள என்கிரிப்ட் டேபினை கிளிக் செய்திடவும். போல்டரை சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்திடவும். உங்களுக்கான பைலானது மற்றவர்கள் திறந்து பார்க்கமுடியாதவகையில் பூட்டப்பட்டுவிடும். இப்போது மீண்டும் இந்த மென்பொருளை திறந்து இந்த பைலினை திறந்து இப்போது டீகிரிப்ட் என்பதனை கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் பைலானது கடவுச்சொல் இல்லாமல் திறந்துகொள்ளும்.


அதுபோல டாக்குமெண்ட்களை டெக்ஸ்ட் பைல்களை நீங்கள் கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம் உங்களுக்கு தேவையான டெக்ஸ்ட்டினை தட்டச்சு செய்தோ காப்பி பேஸ்ட் செய்தோ உள்ளீடவும். பின்னர் இதில் உள்ள என்கிரிப்பட் கிளிக் செய்திடவும். இப்போது பக்கத்தில் உள்ள விண்டோவில் உங்கள் டெக்ஸ்ட் டானது வித்தியாசமான டெக்ஸ்டாக உருமாறியிருக்கும். இப்போது அதனை நீங்கள் சேமித்துவைத்துக்கொள்ளலாம். மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அதனை மற்றவர்கள் பார்த்தாலும் ஒன்றும் தெரியாது. வித்தியாசமான வார்த்தைகளில் இருக்கும். இப்போது மீண்டும் இந்த மென்பொருளை திறந்து என்கிரிப்ட் செய்யப்பட்ட டெக்ஸ்ட்டினை காப்பிசெய்து அதனை டீகிரிப்ட் செய்திடவும்.இப்போது உங்களுக்கு மீண்டும் பழைய பைல்கள் கிடைக்கும். இதன் மூலம் மற்றவர்களிடமிருந்து உங்கள் பைல்களை பாதுகாக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...