உடல்நிலை சரியில்லாத சமயம் நாம் மருத்துவரிடம் சென்று மாத்திரை மருந்து வாங்கிசாப்பிடுவோம். அவ்வாறு வாங்கி சாப்பிடும் மாத்திரை மருந்துக்கள் எந்த எந்த வியாதிகளை சரிசெய்யும். எவ்வாறான பக்கவிளைவுகளை நமக்கு ஏற்படுத்தும் என அறிந்துகொள்ளலாம். மேலும் அந்த மாத்திரையில் என்ன என்ன வேதிப்பொருட்கள் கலந்துள்ளது எனவும் அறியலாம். இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதன் தமிழாக்கம் நாம் பார்க்கலாம். மாத்திரையை பயன்படுத்துவது எப்படி என குறிப்பிடடுள்ளார்கள்.
இந்த வலிநிவாரண மாத்திரை எந்த எந்த வலிகளை சரிசெய்யும் என விவரித்துள்ளார்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் உங்களுக்கான மாத்திரையின் பெயரை தட்டச்சு செய்திடவும். அதுபோல சில பொதுவான மருததுவ குறிப்புகள்கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்திட அந்த இணையபக்கத்திற்கு அழைத்துசெல்லப்படுவீர்கள். அங்கு அந்த மருத்துவத்திற்கான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கம்.
இந்த இணையதளத்தில இந்திய மொழிகள்;அனைத்திற்கும் லிங்க் கொடுத்துள்ளார்கள். உங்கள் விருப்பமான மொழியை தேர்வு செயதிடலாம்.
இந்த இணையபக்கத்தில் நான் ப்ளக்சான்(Flexon) எனப்படும் வலிநிவாரணமாத்திரையை தட்டச்சு செய்தேன். அதன் விவரம் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்கள்.
அதன் தமிழாக்கம் நாம் பார்க்கலாம். மாத்திரையை பயன்படுத்துவது எப்படி என குறிப்பிடடுள்ளார்கள்.
இந்த வலிநிவாரண மாத்திரை எந்த எந்த வலிகளை சரிசெய்யும் என விவரித்துள்ளார்கள்.
மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.மாத்திரையை எப்போது சாப்பிடவேண்டும் எனபன விவரங்கள் கொடுத்துள்ளார்கள். இதில் காணப்படுகின்ற பக்கவிளைவுகள் உங்களுக்கு ஏற்படுமானால் அடுத்துமுறை மருத்துவரை ஆலோசிக்கும் சமயம் இதுகுறித:து முறையிடலாம். அவர்கள் மாத்திரையை மாற்றிதருவார்கள.நீங்கள் எந்த மாத்திரையை சாப்பிடுவதானாலும் மருத்துவரை கலந்து ஆலோசித்து சாப்பிடுவதே நல்லதாகும்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment