மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மின்சார கட்டணத்திற்கான ரீடிங் சில ஊர்களில் எடுக்கவில்லை.இனிவரும் காலங்களில் ரீடிங் எடுக்க வருவார்கள். அதுசமயம் நீங்கள் கவனமாக இருந்தால் குறிப்பிட்ட தொகையை நீங்கள் சேமிக்கலாம்.உங்கள் முந்தைய ரீடிங்கை குறித்துக்கொள்ளுங்கள். தற்போதைய ரீடிங்கை குறித்துக்கொள்ளுங்கள். புதிய ரீடிங்கிலிருந்து பழைய ரீடிங்கை கழித்துவிடுங்கள். வரும் ரீடிங்கை இரண்டால் வகுக்கவும். இப்போது கொடுத்துள்ள அட்டவணையில் வகுத்து வரும் ரீடிங்குக்கான தொகைகள் எவ்வளவு வருகின்றது என பாருங்கள். அதில் நீங்கள் கட்டிய தொகையை கழித்துவிடுங்கள். வரும் தொகைதான் நீங்கள் கட்டவேண்டிய தொகை..இது தவிர்த்து மொத்த ரீடிங்கின் தொகையை கணக்கிட்டு அதில் நீங்கள் கட்டிய பணத்தினை கழித்தால் உங்களுக்கு நஷ்டமேற்படும். உதாரணத்திற்கு சிறிய கணக்கு:-
நீங்கள் இரண்டு மாதத்திற்கு பயன்படுத்திய மின்சாரம்:- 460 யூனிட்டுக்கள் என வைத்துக்கொள்வோம். அதில சரி பாதி 230 யூனிட்டுக்கள் ஒரு மாதத்திற்கான செலவு.230 யூனிட்டிற்கான தொகை -320.00 ரூபாய். இரண்டு மாதத்திற்கு சேர்த்து 640.00 ரூபாய் ஆகின்றது. நீங்கள் ஏற்கனவே கட்டிய தொகை 200.00 என வைத்துக்கொள்ளுங்கள். அதில் 200 கழித்தால் மீதி தொகை 440.00 மட்டும் கட்டினால் போதுமானது..ஆனால் ரீடிங் எடுப்பவர் மொத்தமாக 460 யூனிட்டுக்கு கணக்கிட்டால் 1010.00 ரூபாய் (அட்டவணைப்படி) வருகின்றது. அதில் நீங்கள் ஏற்கனவே கட்டிய தொகை 200.00 கழித்தால் மீதி நீங்கள் 810.00 ரூபாய் கட்டசொல்வார்கள். ஆனால் நீங்கள் கட்டவேண்டியதொகை 440 மட்டுமே..(810.00 - 440.00 = 370.00 ரூபாய் உங்களுக்கு லாபம்) எனவே மின்சார ரீடிங் எடுக்க வருபவரிடம் மொத்த யூனிட்டை இரண்டாக பிரித்து வரும் தொகையில் நீங்கள் கட்டிய தொகையை கழிக்க சொல்லுங்கள். கணக்கு புரியவில்லையென்றால் மீண்டும் ஒரு முறை பதிவை படித்துப்பாருங்கள். எளிதாக புரியும்.
2 comments:
நல்லதொரு தகவலுக்கு நன்றி...
நன்றி சார்..
வாழ்கவளமுடன்
வேலன்.
Post a Comment