வேலன்:-போல்டர் -பைல்கள் -டாக்குமெண்டுகள் -புகைப்படங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாத்திட - Folder Spark.

போல்டர்களை மறைத்துவைக்கவும் பைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாத்திடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. 1 எம்.பிக்கும் குறைவான அளவுள்ள இதனை இதன் இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 அதில் நாம் பயன்படுத்தப்போகும் பாஸ்வேர்டினை இரண்டுமுறை உள்ளீடவும். பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் எந்த போல்டரை நீங்கள் பாதுகாக்க விரும்புகின்றீர்களோ அந்த போல்டரை தேர்வு செய்திடவும்.பின்னர் இந்த விண்டோவில் கீழ்உள்ள லாக் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். நீங்கள் முதன்முதலில் கொடுத்த கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) நினைவில் வைத்திருங்கள். இப்போது உங்கள் போல்டரானது லாக் ஆகிவிட்டிருக்கும்.
 உங்களுக்கு போல்டர் லாக் ஆன தகவல் வரும் போல்டருக்கு சென்று பார்த்தீர்களேயானால் உங்களுக்கு போல்டர் ஐகான பூட்டு சிம்பளுடன் காணப்படும்.
 போல்டர்களை லாக்செய்வது போல நாம் பைல்களையும் என்கிரிப்ட் செய்திடலாம்.
பைல்கள் முக்கியமான டாக்குமெண்ட்டுகள் புகைப்படங்கள் போன்றவற்றை நாம் என்கிரிப்ட் செய்தி இதில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீீங்கள் என்கிரிப்ட் செய்திட புதிய பாஸ்வேர்ட கடவுச்சொல்லையும் இதில் தரலாம். 
பைலினை நீங்கள் என்கிரிப்ட் செய்ததும் உங்களுக்கு தகவல்வரும். நீங்கள் மீண்டும் பைலினை திறக்க விரும்பினால் இந்த சாப்ட்வேர் மூலம்தான் இதனை திறக்க முடியும். இந்த சாப்ட்வேரினை ஓப்பன் செய்துகொள்ளுங்கள் நீங்கள் எந்த பைலினை திறக்க விரும்புகின்றீர்களோ அந்த பைலினை தேர்வு செய்திடுங்கள். பின்னர் உங்களுக்கான கடவுச்சொல்லினை இதில் உள்ளீடுங்கள். இப்போது நீங்கள் பைல் இருக்கும் இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பைலானது இருப்பதை காணலாம். நீங்கள் ஓப்பன் செயது அதனை சுலுபமாக பார்வையிடலாம். இதன் மூலம் நீங்கள் மற்றவர்கள் பாரவையிலிருந்து மறைக்க விரும்பும் பைல்கள்.போல்டர்கள். டாக்குமெண்டுகள்.புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றினை சுலபமாக பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...