வேலன்:- கணினியில் உள்ள டூப்ளிகேட் பைல்களை நீக்கிட -Weeny Duplicate File Remover.

கணினியில் நாம் போல்டர்கள்.புகைப்படங்கள்.வீடியோக்கள் டாக்குமெண்ட்டுகள் போன்றவற்றை உருவாக்கும் சமயம் தெரியாமல் இரண்டாக சேமித்துவைத்துவிடுவோம்.அவ்வாறு சேரும் பைல்கள் இரண்டுக்கும் மேற்பட்டு நமது கணினியில் சேர்ந்துவிடும். அவ்வாறான பைல்களால் நமது ஹார்ட்டிஸ்கில் இடம் ;அடைத்துகொண்டு கணினி மெதுவாக செயல்படும். இவ்வாறான சிக்கல்களை தீர்க்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இது கணினியில் உள்ள ஒன்றுக்கும் மேற்கொண்ட பைல்களை இனம் கண்டு அதனை நீக்கிவிடுகின்றது. இதன்இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்   செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.


இதில் உங்களுக்கு உங்கள் கணினியில் உள்ள டிரைவ்கள் காட்டப்படும். நீங்கள் எந்த டிரைவில் அதிகபடியான டுப்ளிகேட் பைல்கள் உள்ளதோ அந்த டிரைவினை தேர்வு செய்திடவும. மொத்த கணினியும் நீங்கள் சோதிக்க விரும்பினாலும் நீங்கள் சோதிக்கலாம்.
 அடுத்த நகர்வு சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள விண்டோவில் உங்களுக்கு தேவையான விண்டோவினை தேர்வு செய்திடவும். 
 ஒவ்வொரு விண்டோவிற்கும் உள்ள பைல்களின் வகைகள் உங்களுக்கு கிடைக்கும். அதில் உள்ள வகைகளை நீங்கள்தேர்வு செய்து கொள்ளலாம். 
இதில் உள்ள சர்ச ஆப்ஷனிற்கு எதிரில் உள்ள ரேடியோபட்டனை கிளிக் செய்து தேவையானதை பெறலாம்.
 
 அனைத்து பணிகளும் முடிந்ததும் உங்களுக்கு உங்கள் பைல்கள் தேட ஆரம்பிக்கும். அதில் உள்ள வகைகளும் ;உங்களுக்கு தெரியவரும்.
இறுதியாக உங்கள் கணினியில் உங்கள் தேர்வு கெற்ற டிரைவில் எவ்வளவு டூப்ளிகேட் பைல்கள் உள்ளதோ அதன் அனைத்து விவரங்களும் தெரியவரும். அதனை சுலபமாக நீக்கியோ அல்லது வேறு ஒரு இடத்தில் சேமித்தொ வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் கணினியில் தேவையற்ற பைல்கள் நீங்கள் கணினியின் ஹாரட்டிஸ்க்கில் கூடுதல் இடம் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...