வேலன்-சுடாகு -Sudoku விளையாட்டு.

நண்பர் ஓருவர் ஆங்கில தினசரியையும் கையில் பென்சிலையும் வைத்துக்கொண்டு இந்த விளையாட்டை விளையாடிக்கொண்டு இருப்பார்.
அப்படி என்ன தான் விளையாடுகின்றார் என்று பார்த்தால் இந்த சுடாகு-Sudoku விளையாட்டைதான் விளையாடுவார்.ஒரு முறை விளையாடி வெற்றிபெற்றுவிட்டால் அடிக்கடி விளையாடி பார்க்க மனம் விரும்பும்.13 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

மேலே பார்த்தீர்களேயானால் பல டேப்புகள் இருக்கும். புதிய விளையாட்டு,விளையாட்டு வகை என தேர்வு செய்யலாம். நான் மிக சுலபம் -very easy -வகையை தேர்வு செய்துள்ளேன்.
அடுத்துள்ள Appearance கிளிக் செய்து உங்கள் விளையாட்டின் பார்டரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பின்புறத்தையும் வண்ண வண்ண டிசைன்களால் மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். இதில் இடது புறம் உள்ள டிசைனை தேர்வு செய்தால் உங்களுக்கு விரும்பிய டிசைன் வரும்.
அதைப்போலவே விரும்பிய எண்களின் டிசைன்கள் உள்ளது உங்கள் தேவைக்கு ஏற்ப டிசைனை தேர்வு செய்துகொள்ளலாம்.
யார் விளையாட்டை விளையாடுகின்றார்களோ அவர்களின் புகைப்படத்தை இதில் கொண்டுவந்துவிடலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
விளையாடும் சமயம் விதவிதமான ஒலிகளை இதில் ஒலிக்க செய்யலாம்.
நமது கம்யுட்டரின் கீ-போர்டிலிருந்தோ - அவர்களே கொடுத்துள்ள கீ -போர்டிலிருந்தோ அல்லது கட்டத்தில் வைத்து கிளிக் செய்தாலோ எண்களை நாம் சுலபமாக கொண்டுவந்துவிடலாம். தேவையான எண்ணை வைதது கிளிக் செய்தால் போதும்.
நமது புகைப்படத்துடன் வந்துள்ள விண்டோ.குழந்தைகளுக்கு அவர்களின் புகைப்படத்துடன் இந்த விளையாட்டை சொல்லிக்கொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
இதெல்லாம் சரி..எப்படி விளையாடுவது என்று கேட்கின்றீர்களா? ஒரு பாக்ஸில் 9 கட்டங்கள் இருக்கும். அதுபோல 9 பாக்ஸ் சேர்நது ஒரு பெரிய பாக்ஸாக இருக்கும். 9X9 (அதாவது மொத்தம் 81 கட்டங்கள் இருக்கும்) கட்டங்கள் இருக்கும். இதில் ஒவ்வொரு பாக்ஸிலும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை 1-லிருந்து 9 வரை எண்களை நிரப்பவேண்டும். ஒரு முறை வந்த எண் மறுமுறை வரகூடாது.அதைப்போலவே மொத்த கட்டங்களிலும் எல்லா எண்களும் வரவேண்டும்.இதிலேயே பென்சிலும் கொடுத்துள்ளார்கள். வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம்.மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுக்கும் விளையாட்டு. கீழே நான் விளையாடி வெற்றி பெற்ற விண்டோ.பார்த்தால் உங்களுக்கு புரியும் என எண்ணுகின்றேன்.
எப்போது பார்த்தாலும் வேலை -டென்ஷன் என்று அல்லாடும் நாம் கொஞசம் மனதை ரிலாக்ஸ் செய்ய இந்த விளையாட்டினை விளையாடிபார்க்கலாம் நீங்களும் ஒரு முறை விளையாடிப்பாருங்கள்.வெற்றி பெற வாழ்ததுக்கள்..
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு-ஞாயிறு அன்று கடைக்கு(velang.blogspot.com) வந்த உங்களுக்கு நன்றி.மறக்காமல் ஒட்டுப்போட்டு செல்லுங்கள். வசூல் (ஓட்டு) இருந்தால்தானே அடுத்தவாரமு்ம் ஞாயிறு அன்று கடையை திறக்க முடியும். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

மாணவன் said...

விளையாடிபார்த்துடலாம் சார்...
ஓட்டுப்போட்டாச்சு சார்...
அடுத்த வாரமும் கண்டிப்பாக கடையை திறந்திடுங்க...
பகிர்ந்தமைக்கு நன்றி...

JOE2005 said...

நன்றி .பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி .பணி தொடரட்டும் .வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

சுடோகு முன்னாடியெல்லாம் தனியா விளையாடிகொண்டே இருப்பேன். நல்ல விளையாட்டு, நிறைய யோசிக்க வைக்கும். பதிவிற்கு நன்றி.

வெறும்பய said...

விளையாடி பாத்திர வேண்டியது தான்...

தமிழ் உதயம் said...

மொபைலில்
சுடோகுவை விரும்பி விளையாடுவேன். மூளைக்கு புத்துணர்ச்சி தரும் விளையாட்டு. இனி கணினியிலும் விளையாடலாம

சே.குமார் said...

விளையாடி பாத்திர வேண்டியது தான்...

Jayashankar said...

மிகவும் அருமையான விளையாட்டுங்க வேலரே!

குழந்தைகளின் மூளைக்கு சிறந்த வேலை..

மிக்க நன்றி...

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்

Anonymous said...

Thank u a lot..

அன்புடன் அருணா said...

Nice.

AYUB KHAN said...

வித்தியாசமான விளையாட்டு . குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன் .நன்றி

வேலன். said...

மாணவன் கூறியது...
விளையாடிபார்த்துடலாம் சார்...
ஓட்டுப்போட்டாச்சு சார்...
அடுத்த வாரமும் கண்டிப்பாக கடையை திறந்திடுங்க...
பகிர்ந்தமைக்கு நன்றி...

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

JOE2005 கூறியது...
நன்றி .பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி .பணி தொடரட்டும் .வாழ்த்துக்கள்
ஃஃ

நன்றி நண்பர் JOE2005 அவர்களே..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
சுடோகு முன்னாடியெல்லாம் தனியா விளையாடிகொண்டே இருப்பேன். நல்ல விளையாட்டு, நிறைய யோசிக்க வைக்கும். பதிவிற்கு நன்றி.
நன்றி எஸ்.கே.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
விளையாடி பாத்திர வேண்டியது தான்...

நன்றி நண்பரே..(உங்களது பெயரே வெறும்பய தானா...கூப்பிடுவதற்கு சங்கடமாக உள்ளதே..)
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ் உதயம் கூறியது...
மொபைலில்
சுடோகுவை விரும்பி விளையாடுவேன். மூளைக்கு புத்துணர்ச்சி தரும் விளையாட்டு. இனி கணினியிலும் விளையாடலாம
ஃஃ

நன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
விளையாடி பாத்திர வேண்டியது தான்...
வாங்க குமார் சார்..உ2ங்கள் பசங்களிடம் கொடுங்கள். விளையாடுவார்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jayashankar கூறியது...
மிகவும் அருமையான விளையாட்டுங்க வேலரே!

குழந்தைகளின் மூளைக்கு சிறந்த வேலை..

மிக்க நன்றி...

என்றென்றும் அன்புடன்,

ஜெயசங்கர்


நன்றி ஜெய சங்கர சார்.தங்கள் வருகைக்கும கருததுக்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ராதை/Radhai கூறியது...
Thank u a lot.

நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் கருததுகு்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
Nice.

நன்றி சகோ..தங்கள் வருகைக்கும கருததுகு்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

AYUB KHAN கூறியது...
வித்தியாசமான விளையாட்டு . குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன் .நன்றி

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.

ம.தி.சுதா said...

உபயோகமான ஒருவிடயம் வாழ்த்துக்கள்... சகோதரா.

வேலன். said...

ம.தி.சுதா கூறியது...
உபயோகமான ஒருவிடயம் வாழ்த்துக்கள்... சகோதரா.
ஃஃ


நன்றி சகோதரி...
வாழ்த்துக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...