வேலன்-இலவச போல்டர் லாக் பாக்ஸ்.

அலுவலகம் ஆகட்டும் - இல்லம் ஆகட்டும் - நமக்கு என்று தனிப்பட்ட தகவல்கள் நிச்சயம் இருக்கும். அதை மற்றவர்களிடம்இருந்து மறைத்து வைக்கலாம். ஆனால் இல்லாமல் செய்ய முடியுமா? முடியும். போல்டர்பாக்ஸ் எனப்படும் இதில் போல்டர்களை போட்டுவைத்து பின்னர் போல்டர்கள் தேவையானால் இல்லாமல் செய்து தேவைபடும்பேர்து பாஸ்வேர்ட் கொடுத்து ஓப்பன் செய்து பார்க்கலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள Set கிளிக் செய்தால் உங்கள் ஹார்ட்டிஸ்கில் உள்ள போல்டர்கள் ஓப்பன் ஆகும். தேவையான போல்டரை தேர்வு செய்துகொள்ளுங்கள். இதில் உள்ள Advanced கிளிக்செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் 8 டேப்புகள் இருக்கும்.இதன் Skin -ஐ வேண்டிய நிறத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.  
நான் மாற்றிய கோல்டன் நிறத்தை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பாஸ்வேர்டும் இதில் கொடுத்துதான் நாம் நமது தகவல்களை சேமிக்கவேண்டும்.நமது நினைவிற்கு தேவையான கேள்வியின் வாக்கியத்தை நாமே அமைத்து அதன் விடையை தட்டச்சு செய்தால்தான் நமக்கு போல்டர் ஓப்பன் ஆகும்படி செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
மற்ற சாப்ட்வேரில் இல்லாத கூடுதல் வசதி என்றால் நீங்கள் இதன்மூலம் லாக் செய்த போல்டரை தேவையான டிரைவில் சென்று தேடினாலும் கிடைக்காது. மறைந்து இருக்கும். மீண்டும் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து அன்லாக் செய்து ஓப்பன்செய்தால்தான் உங்களுக்கு அந்த போல்டர் டிரைவில் தெரியும். பர்சனல் தகவல்கள் வைத்துகொள்ள விரும்புபவர்கள் இதனை உபயோகிக்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

இதற்கு முன் பதிவிட்டபோல்டரை லாக் செய்ய -Folder Lock பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.மற்றும் ஒரு பதிவான பைல் மற்றும் போல்டரை மறைப்பது எப்படி? பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

பொன் மாலை பொழுது said...

உபயோகமான சாப்ட் வேர் தான் மாப்ள. நிறைய பேருக்கு யூஸ் ஆகும். அதுசரி, raajaraajan father's name என்ன velan
தானே? !

மாணவன் said...

மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்

Anonymous said...

nantrie sola unaku vartha ila
enaku.

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே

'பரிவை' சே.குமார் said...

மிகவும் பயனுள்ள தகவல்.

Unknown said...

சார் அருமையான மென்பொருள் சார் அதுவும் இலவசமாக,,,,
மிக்க நன்றி சார்,
அப்படியே சிறு உதவி சார்
சார் நான் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு பதாகை(flex banner ) அடிப்பதர்ற்கு ஒரு கடைக்கு சென்றிருந்தேன் அவர்கள் என்னிடம் எத்தனைக்கு எத்தனை என்று கேட்டார்கள் நான் 4 *6 என்று கூறியவுடன் அவர்களின் கணிப்பொறியில் போடோஷாப் மென்பொருளில் ஒரு அளவு குடுத்தார்கள்(சரியான புள்ளிவிவரம் எனக்கு ஞாபகம் இல்ல சார் ) அது 4 *6 அடி கணக்கு மாதிரி தெரியவில்லை இதை எப்படி சார் கணக்கு செய்வது உதவுங்களேன்!
அதாவது போடோஷோப்பில் அடி(feet ) கணக்கு இல்லை மாறாக pixels ,inches இதைபோன்ற அளவுகள் தான் இருக்கின்றன இத்தனை அடிக்கு இந்த கணக்கு என்று எப்படி calculate செய்வது விளக்குங்களேன்
அப்படி தெரிந்துகொண்டால் நாமே நமக்கு தேவையானவற்றை டிசைன் செய்து விட்டு அவர்களிடம் ப்ரிண்டிங்க்க்கு மட்டும் குடுத்தால் பணமும் மிச்சமாகும் நாம் வடிவமைத்தமை என்ற மனநிறைவும் மற்றவர்கள் அதை பாராட்டினால் கிடைக்கும் இன்பமும் இருமடங்காகும் அல்லவா சார் உதவுங்களேன்

Jaleela Kamal said...

எல்லோருக்கும் உபயோகமான பதிவு.

முஹம்மது நியாஜ் said...

திரு வேலன் அவர்களுக்கு
உங்கள் பதிவு பற்றி சொல்வதற்க்கு புதிதாக வார்த்தை இல்லை. வழக்கம் போல் அருமை அத்துடன் புதுமை அதுவே வேலனின் தனி தன்மை.
சகோதரர் சந்தீப் கேள்வி பதில் தர வேண்டுகின்றன். காரணம் என் மனதில் எழுந்த சந்தேகம் அது, அதை சந்தீப் கேள்வியாக கேட்டுவிடடர்.
அவலுடன் அவர் சார்பாக எதிர்பார்கின்றேன்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

அறிவு GV said...

மிகவும் பயனுள்ள மென்பொருள். அறிமுகத்துக்கு நன்றி வேலன். ஆனால் ஒரு சந்தேகம், ஒருவேளை நமது கடவுச்சொல்லை மறந்துவிட்டாளோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை என்றாலோ நமது 'போல்டரை' பத்திரமாக மீட்க முடியுமா? பர்சனல் தகவல்களை எக்காரணம் கொண்டும் இழக்கக் கூடாதல்லவா..! (முன்பு ஒருமுறை இழந்துவிட்டேன், அதிலிருந்து இதுபோன்ற மென்பொருள்களை நான் பயன்படுத்துவதில்லை). தெளிவுபடுத்துங்கள். நன்றி..!

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
உபயோகமான சாப்ட் வேர் தான் மாப்ள. நிறைய பேருக்கு யூஸ் ஆகும். அதுசரி, raajaraajan father's name என்ன velan
தானே? !
//

அட..பாஸ்வேர்ட் உங்களுக்கு தெரிந்துவிட்டதா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
nantrie sola unaku vartha ila
enaku.ஃ

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தமிழ்த்தோட்டம் கூறியது...
மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே
ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
மிகவும் பயனுள்ள தகவல்.

நன்றி குமார் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

sudheep கூறியது...
சார் அருமையான மென்பொருள் சார் அதுவும் இலவசமாக,,,,
மிக்க நன்றி சார்,
அப்படியே சிறு உதவி சார்
சார் நான் எங்கள் குலதெய்வ கோவிலுக்கு பதாகை(flex banner ) அடிப்பதர்ற்கு ஒரு கடைக்கு சென்றிருந்தேன் அவர்கள் என்னிடம் எத்தனைக்கு எத்தனை என்று கேட்டார்கள் நான் 4 *6 என்று கூறியவுடன் அவர்களின் கணிப்பொறியில் போடோஷாப் மென்பொருளில் ஒரு அளவு குடுத்தார்கள்(சரியான புள்ளிவிவரம் எனக்கு ஞாபகம் இல்ல சார் ) அது 4 *6 அடி கணக்கு மாதிரி தெரியவில்லை இதை எப்படி சார் கணக்கு செய்வது உதவுங்களேன்!
அதாவது போடோஷோப்பில் அடி(feet ) கணக்கு இல்லை மாறாக pixels ,inches இதைபோன்ற அளவுகள் தான் இருக்கின்றன இத்தனை அடிக்கு இந்த கணக்கு என்று எப்படி calculate செய்வது விளக்குங்களேன்
அப்படி தெரிந்துகொண்டால் நாமே நமக்கு தேவையானவற்றை டிசைன் செய்து விட்டு அவர்களிடம் ப்ரிண்டிங்க்க்கு மட்டும் குடுத்தால் பணமும் மிச்சமாகும் நாம் வடிவமைத்தமை என்ற மனநிறைவும் மற்றவர்கள் அதை பாராட்டினால் கிடைக்கும் இன்பமும் இருமடங்காகும் அல்லவா சார் உதவுங்களேன்
//

தங்கள் வருகைக்கு நனறி நண்பரே..
வேலை காரணமாக உடனே பதிலை பதிவிட முடியவில்லை.
நீங்கள் பேனரில் போட விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளவும். இமெஜ் சைஸ் ஓப்பன்செய்துகொள்ளவும்.நீங்கள் பேனர் போட விரும்பும் அளவினை தேர்வு செய்துகொள்ளவும்.உதாரணத்திற்கு நீங்கள் 4 அடிக்கு 3 அடியில் பேனர்போடவிரும்பினால் பேனர் அளவினை 12 ஆல் பெருக்கி கொள்ளவும். 4 X 12=48 inch., 3X12=36 inch., அதாவது நீங்கள் போட்டோஷாப்பில் இமெஜ் சைஸை அகலம் 48 இன்ஜ்.உயரம் 36 இன்ஜ் என அமைத்துக்கொள்ளவும்.ரெசுலேஷனை குறைவாக அமைத்து்க்கொள்ளவும. இப்போது நீங்கள் பேனரில் வேண்டிய டிசைன்செய்துகொள்ளலாம். சரியாக வரும்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jaleela Kamal கூறியது...
எல்லோருக்கும் உபயோகமான பதிவு.
ஃஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஃ

வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
திரு வேலன் அவர்களுக்கு
உங்கள் பதிவு பற்றி சொல்வதற்க்கு புதிதாக வார்த்தை இல்லை. வழக்கம் போல் அருமை அத்துடன் புதுமை அதுவே வேலனின் தனி தன்மை.
சகோதரர் சந்தீப் கேள்வி பதில் தர வேண்டுகின்றன். காரணம் என் மனதில் எழுந்த சந்தேகம் அது, அதை சந்தீப் கேள்வியாக கேட்டுவிடடர்.
அவலுடன் அவர் சார்பாக எதிர்பார்கின்றேன்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
ஃஃ

நன்றி முஹம்மது நியாஜ் சார். உங்களுக்கான விடை கீழே-
நீங்கள் பேனரில் போட விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளவும். இமெஜ் சைஸ் ஓப்பன்செய்துகொள்ளவும்.நீங்கள் பேனர் போட விரும்பும் அளவினை தேர்வு செய்துகொள்ளவும்.உதாரணத்திற்கு நீங்கள் 4 அடிக்கு 3 அடியில் பேனர்போடவிரும்பினால் பேனர் அளவினை 12 ஆல் பெருக்கி கொள்ளவும். 4 X 12=48 inch., 3X12=36 inch., அதாவது நீங்கள் போட்டோஷாப்பில் இமெஜ் சைஸை அகலம் 48 இன்ஜ்.உயரம் 36 இன்ஜ் என அமைத்துக்கொள்ளவும்.ரெசுலேஷனை குறைவாக அமைத்து்க்கொள்ளவும. இப்போது நீங்கள் பேனரில் வேண்டிய டிசைன்செய்துகொள்ளலாம். சரியாக வரும்.
வாழ்க வளமுடன்.
வேலன்

வேலன். said...

Ravi kumar Karunanithi கூறியது...
good postஃ

நன்றி ரவிகுமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அறிவு GV கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருள். அறிமுகத்துக்கு நன்றி வேலன். ஆனால் ஒரு சந்தேகம், ஒருவேளை நமது கடவுச்சொல்லை மறந்துவிட்டாளோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை என்றாலோ நமது 'போல்டரை' பத்திரமாக மீட்க முடியுமா? பர்சனல் தகவல்களை எக்காரணம் கொண்டும் இழக்கக் கூடாதல்லவா..! (முன்பு ஒருமுறை இழந்துவிட்டேன், அதிலிருந்து இதுபோன்ற மென்பொருள்களை நான் பயன்படுத்துவதில்லை). தெளிவுபடுத்துங்கள். நன்றி..!
ஃஃ//

என்னுயிர் கணிணியே,
என் மறதி என்பது
உனக்கு இழப்பு - ஆனால்
உன் இழப்பு என்பதே
எனக்கு இறப்பு..!ஃஃ

கவிதை நன்றாக இருக்கா நண்பரே...
வாழ்கவளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...