வேலன்-Youtube -லிருந்து வேண்டிய பார்மெட்டுக்கு பதிவிறக்கம் செய்ய

இணையம் பயன்படுத்தினாலே அதில் youtube தவிர்க்க முடியாது. ஏதாவது ஒரு சமயத்தி்ல் நாம் youtube லிருந்து வீடியோவை தரவிறக்கம் செய்வோம்.  youtube லிருநது டவுண்லோடு செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் இருந்தாலும் சற்று வித்தியசமாக இந்த சாப்ட்வேர் உள்ளது. 4 எம்.பி .கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு இன்ஸ்டால் செய்தததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து Youtube URL ஐ காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.

தரவிறக்கம் செய்யப்படும் பைல் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு இதில் எளிதில மாற்றிக்கொள்ளலாம். இது ஆதரிக்கும் பார்மெட்டாக
 1)None (No converting, FLV file type)
(2)AVI (Microsoft Windows Media File Type)
(3)WMV (Zune/PocketPC File Type)
(4)MOV (QuickTime File Type)
(5)MP4 (iPod/PSP/MP4 Player File Type)
(6)3GP (Mobile Phone Video File Type) உள்ளன. 3 GP ஐ இது ஆதரிப்பதால் செல்போன் மற்றும் ஐ-பாட்டுக்கு இதிலிருந்து நேரடியாக பதிவேற்றிக்கொள்ளலாம்.அதுபோல சில ஆடியோ பைல்கள் பாடல்களை நாம் கேட்கமட்டுமே முடியும். அதை பதிவிறக்கம் செய்ய முடியாது. அந்த மாதிரியான பாடல்களை இதன் மூலம் எளிதில பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடோப் பிரிமியர் உபயோகிப்பவர்கள் யு டியுப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யும் பாடல்களை பிரிமியரில் நேரடியாக பயன்படுத்தமுடியாது. அந்த சமயங்களில் இந்த சாப்ட்வேர் மூலம் MOV பைலாக பதிவிறக்கம் செய்து எளிதில்பயன்படுததிக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

மாணவன் said...

மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்,

தொடரட்டும் உங்கள் பணி

வாழ்க வளமுடன்

பி.நந்தகுமார் said...

வேலன் அண்ணா இது வரை நான் யூடியுப்பை பிளாக்கரில் மட்டும்தான் பயன்படுத்தி வந்தேன். இப்போது தான் அதை பதவிறக்கம் செய்து கைபேசியில் கூட பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன். அற்புதமான மென்பொருள் தந்த வேலன் அண்ணாவிற்கு நன்றி! காங்கேயம் பி.நந்தகுமார்

Chitra said...

Thank you. :-)

மச்சவல்லவன் said...

சார் எனக்கு தேவையான மென்பொருள்.உங்களிடமும் கேழ்க நினைத்திருந்தேன்,நீங்களே கொடுத்திட்டிங்க.
நன்றி சார்.
வாழ்த்துக்கள்...

sudheepsankar said...

mikka nandri velan sir idhanudan nan en karuthai sollalama sir?
enakku ungal blog migavum pidithirukiradhu ungal blogil irundhu niraya katrukonden kurippaga adobe photoshop meedhu enakirundha aarvathai adhigapaduthiviteergal ungalukku sammadhame aanal indha requestirkku badhil aliyungal nan enakku therindha matrum ellorukkum payan padakoodia tipsgalai ungaludan serndhu valangalama? enakku computerla pidichadhu 2 visayam sir onnu MS-Excel innonu photoshop idhula photoshopirkku neenga udhavureenga adhe pol ME-Excelkku nan udhavalama?

வேலன். said...

மாணவன் கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்,

தொடரட்டும் உங்கள் பணி

வாழ்க வளமுடன்

நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பி.நந்தகுமார் கூறியது...
வேலன் அண்ணா இது வரை நான் யூடியுப்பை பிளாக்கரில் மட்டும்தான் பயன்படுத்தி வந்தேன். இப்போது தான் அதை பதவிறக்கம் செய்து கைபேசியில் கூட பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன். அற்புதமான மென்பொருள் தந்த வேலன் அண்ணாவிற்கு நன்றி! காங்கேயம் பி.நந்தகுமார்

நன்றி நந்தகுமார்.தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Thank you. :-)ஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
சார் எனக்கு தேவையான மென்பொருள்.உங்களிடமும் கேழ்க நினைத்திருந்தேன்,நீங்களே கொடுத்திட்டிங்க.
நன்றி சார்.
வாழ்த்துக்கள்...

நன்றி மச்சவல்லவன் சார்..தங்கள் கருத்துக்கு நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

sudheepsankar கூறியது...
mikka nandri velan sir idhanudan nan en karuthai sollalama sir?
enakku ungal blog migavum pidithirukiradhu ungal blogil irundhu niraya katrukonden kurippaga adobe photoshop meedhu enakirundha aarvathai adhigapaduthiviteergal ungalukku sammadhame aanal indha requestirkku badhil aliyungal nan enakku therindha matrum ellorukkum payan padakoodia tipsgalai ungaludan serndhu valangalama? enakku computerla pidichadhu 2 visayam sir onnu MS-Excel innonu photoshop idhula photoshopirkku neenga udhavureenga adhe pol ME-Excelkku nan udhavalama?

தங்கள் வருகைக்கு நன்றி சங்கர் சார்.தங்கள் உதவிக்கு நன்றி..தெரிந்ததை நாலு பேருக்கு சொல்லிகொடுப்பதில் தவறில்லை..தங்களுக்கு தெரிந்ததை சொல்லிக்கொடுங்கள்.கற்றுக்கொள்கின்றோம்.வாழ்கவளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...