வேலன்:-தட்டச்சு வேகம்அறிந்துகொள்ள

தட்டச்சு கற்றுகொண்டால் பின்னாலில் சமயத்தில் நமக்கு கைகொடுக்கும். அந்த நாளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பயின்றதால்தான் என்னால் சுலபமாக பதிவுகளில் தட்டச்சு செய்ய முடிகின்றது. உங்கள் குழந்தைகளுக்கும் சமயம் கிடைத்தால் தட்டச்சு பயில அனுப்பி வையுங்கள். சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.. தட்டச்சு செய்கையில் வேகம் மற்றும் பிழைகள் இல்லாமல் இருப்பது முக்கியம். இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது.200 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு எழுத்துக்கள்மங்கலாக தெரியும். வார்த்தைகளை பார்த்து அப்படியே தட்டச்சு செய்ய வேண்டியதுதான். நீங்கள் பிழைசெய்யும் பட்சத்தில் உங்களுக்கு வார்த்தையானது சிகப்பு நிறமாக மாறிவிடும்.
மேல்புறம் உள்ள விண்டோவில் உங்களுக்கான நேரம் ஒடிக்கொண்டு இருக்கும். அடுத்த டேபில் நீஙகள் எவ்வளவு வேகத்தில் தட்டச்சு செய்கின்றீர்களோ அதனுடைய எண்ணிக்கை தெரியவரும். அதாவது நீங்கள் எவ்வளவு வார்த்தைகள் ஒரு நிமிடத்திற்கு அடிக்கின்றீர்களோ அதன் எண்ணிக்கை தெரியும். கடைசியாக உள்ள டேபில் நீங்கள் எவ்வளவு தவறு செய்கின்றீர்களோ அதற்கேற்ப உங்களுக்கு சதவீதங்கள்தெரியவரும்.நீங்களும் உங்களுடைய தட்டச்சு வேகத்தை தெரிந்துகொள்ளுங்கள்.டைப்ரேட்டிங் தேர்வுக்கு செல்பவர்களுக்கு இது மிகவும் பயன்படும் நீங்களும்பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

பால கணேஷ் said...

இப்ப டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்லாம் காத்து வாங்குது வேலன். நீங்க சொன்ன சாஃப்ட்வேர் மூலமாவாவது டைப்பிங் நல்லாப் பழகிக்கிட்டா சரி... பகிர்வுக்கு நன்றி!

வேலன். said...

கணேஷ் said...
இப்ப டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்லாம் காத்து வாங்குது வேலன். நீங்க சொன்ன சாஃப்ட்வேர் மூலமாவாவது டைப்பிங் நல்லாப் பழகிக்கிட்டா சரி... பகிர்வுக்கு நன்றி!//

நன்றி கணேஷ் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Anonymous said...

Superb thanku velan sir.

Related Posts Plugin for WordPress, Blogger...