வேலன்:-2011-ல் அதிகம் பேர் டவுண்லோடு செய்த சாப்ட்வேர்கள்.

ஒவ்வொரு வருடத்தின் இறுதியில் தினசரிகளில் அந்த வருடங்களில் வெளியான திரைப்படங்களில் அதிக நாட்கள் ஒடிய திரைப்படங்கள் பற்றி போடுவார்கள்.. அதைப்போலஎனது பிளாக்கில் அதிகநபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவுகளை பற்றி பதிவிடுகின்றேன்.இந்த வருடத்தில் எனது மொத்த் பதிவுகள் 217.அதிகம் பேர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட சிறந்த 10 பதிவுகள் கீழே:-
1.வேலன்:- உங்கள் உயரத்திற்கு ஏற்ற சரியான எடையை அறிந்து கொள்ள -மொத்தம் பதிவிறக்கியவர்கள் :-2051 பேர்.
ஆளைப்பார்த்து எடை போட்டுவிடலாம் என்று சொல்லுவார்கள். நீங்கள் உங்கள் உயரத்து ஏற்ற எடையில் இருக்கின்றீர்களா? எடை உங்கள் உடல்வாகுக்கு அதிகமாக உள்ளதா-அல்லது குறைவாக உள்ளதா? எளிதாக அறிந்துகொள்ளலாம்.இது உண்மையிலேயே ஆள் உயரம்-எடை பார்த்து அவர்கள்பற்றி சொல்லிவிடும் சின்ன சாப்ட்வேர்.குறிப்பிட்ட உயரத்திற்கு குறிப்பிட்ட எடைதான் இருக்கவேண்டும். அது குறைந்தாலும் கஷ்டம். அதிகமானாலும் கஷ்டம்.231 கே.பி. அளவுள்ள இந்த குட்டியூண்டு  சாப்ட்வேரினை மேலும் படிக்க
----------------------------------------------------------------------------------------
2.வேலன்:-கணிணியின் அனைத்து விவரங்களும் அறிந்துகொள்ள -பதிவிறக்கம் செய்தவர்கள் - 1755 பேர்.
பிரபல மருததுவமனைகளில் மாஸ்டர் செக்கப் என்று செய்யும்போது நமது பெயருக்கு ஒரு பைல் ஒன்றினை போட்டு நமது உடல்நிலை பற்றிய அனைத்து விவரங்களையும் அதில் குறித்துவைத்திருப்பார்கள். அதுபோல் இந்த சின்ன சாப்ட்வேரானது நமது கம்யுட்டரின் அனைத்து தகவல்களையும் சேமித்து வைத்துள்ளது.2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------






3.வேலன்:-விதவிதமான போட்டோ ஆல்பம் நாமே உருவாக்க -- பதிவிறக்கம் செய்தவர்கள் -1711 பேர்.


புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் என்னற்ற PSD டிசைன் பைல்கள் உள்ளன.ஆனால் நமது விருப்பதற்கேற்ப - திருமணம்-பிறந்தநாள்-காலண்டர்-அன்னையர் தினம் - குழந்தைகள் தினம் - காதலர்தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட


மேலும் படிக்க
------------------------------------------------------------------------
4.வேலன்:-யூடியூப் வீடியோக்களை எளிதில் பதிவிறக்கம் செய்ய -பதிவிறக்கம் செய்தவர்கள் - 1567
இணையத்தில் அதிக அளவு வீடியோக்களை நாம் யூ டியுப் இணையதளம் மூலம் பார்க்கின்றோம். சில வீடியோக்களை பதிவிறக்கம்செய்து பின்னர் பார்க்கவும் விரும்புவோம். பதிவிறக்கம் செய்வதில் புதியவர்கள் நிறையபேர் தடுமாற்றம் அடைவார்கள். எளிய முறையில் யூடியுப்விடியோக்களை பதிவிறக்கம் செய்ய இந்த புதிய சாப்ட்வேர் வந்துள்ளது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை  மேலும் படிக்க
----------------------------------------------------------------------------------------------
5.வேலன்:-போல்டர்களை ரகசியமாக மறைத்து வைக்க - பதிவிறக்கம் செய்தவர்கள் -1533.
ரகசியம் யாருக்குதான் இருக்காது..ரகசியத்தை ரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விவரங்களை வைத்திருப்பார்கள்.கணக்குவிவரம்-தொலைபேசி எண்கள்-பாஸ்வேர்ட்கள்-புகைப்படங்கள் என ரகசியங்கள் பலவகைகளில் இருக்கும். அதை எலலாம் மொத்தமாக ஒரு போல்டரில் போட்டு அந்த போல்டரை தனியே மறைததுவிடலாம். 400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பற்றி மேலும் படிக்க
----------------------------------------------------------------------------------------------
6.வேலன்:-இலவச வீடியோ கன்வர்ட்டர் - பதிவிறக்கம் செய்தவர்கள்-1497
இணையத்தில் எவ்வளவோ வீடியோ கன்வர்டர்கள் கிடைக்கின்றன.சிலவற்றை காசு கொடுத்து வாங்கவேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும. ஆனால் இந்த வீடியோ கன்வ்ர்டர்  இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதனை மேலும் படிக்க
-------------------------------------------------------------------------
7.வேலன்:-புகைப்படத்தினை கார்ட்டுன் படமாக எளிதில் மாற்ற -பதிவிறக்கம் செய்தவர்கள் -1480.
புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த சாப்ட்வேரில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும். தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானல் செய்துகொண்டு அதனை தனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனைபற்றி மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------
8.வேலன்:-வீடியோ ஸ்கிரீன்சேவரை உருவாக்குவது எப்படி? -பதிவிறக்கம் செய்தவர்கள் -1101.
விதவிதமான வீடியோ -ஸ்கிரீன்சேவர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நாமே ஸ்கிரீன்சேவரை உருவாக்கினால் எப்படி இருக்கும். நமக்கு விருப்பமான படங்கள்- சுப்ரபாதம்-கந்தசஷ்டி கவசம் என நமது கம்யூட்டர் ஒய்வாக இருக்கும் சமயங்களில் வீடியோவாக ஒளித்தால் அருமையாக இருக்கும் அல்லவா? அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர நமக்கு உதவி புரிகின்றது.இந்த சாப்ட்வேரில  மேலும் படிக்க
-----------------------------------------------------------------------------------------
9.வேலன்:-ஒரே சாப்ட்வேரில் விதவிதமான 19 விளையாட்டுக்கள் - பதிவிறக்கம் செய்தவர்கள் -1079.
இந்த சின்ன சாப்ட்வேரில் ஒன்றல்ல இரண்டல்ல -மொத்தம் 19 விளையாட்டுகள் உள்ளது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு 




மேலும் படிக்க
-------------------------------------------------------------------------
10.வேலன்:-விரைவாக பைல்களை காப்பி செய்ய -பதிவிறக்கம் செய்தவர்கள்-1080.
பைல்களை நாம் ஒரிடத்தில் இருந்து வேறு போல்டருக்கோ - பென்டிரைவுக்கோ காப்பி செய்து மாற்றுவோம்.இந்த நைஸ்காப்பியர் என்கின்ற 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்ய மேலும் படிக்க
-------------------------------------------------------------------------
மக்கள் திலகம் .எம.ஜி.ஆர்.அவர்கள் நடித்த படங்கள் எப்போழுது திரையிட்டாலும் வசூலை வாரி குவித்துவிடும். அதைப்போலவே சென்ற வருடம் பதிவிட்ட ஜாதகம் சம்பந்தமான சாப்ட்வேர்களும் சாதனை படைத்துள்ளது.
வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க - பதிவிறக்கியவர்கள் 7923


ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர்
--------------------------------------------------------------------------

வேலன்:-தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க - பதிவிறக்கியவர்கள் 4495
ஆயிரம்தான் சொல்லுங்க...தமிழில் நமது ஜாதகத்தின் பலன்கள் படித்துப்பார்ப்பதில் உள்ள சுகமே அலாதிதான்.பிறந்த குறிப்பு - ஜாதக கட்டம் -----செவ்வாய் தோஷம்-பிறந்த போது உள்ள தசை இருப்பு-ராசி மற்றும் நட்சத்திரப்பலன்கள்-கோசார பலன்கள் என இதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பற்றி 
----------------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவினை நாளை பதிவிடலாம் என வைத்திருந்தேன். தானே புயல் வருவதன் காரணமாக இணைய இணைப்பு மற்றும் மின்சாரம் தடைபடலாம் என்கின்ற காரணத்தால் இன்றே பதிவிட்டுவிட்டேன்.பதிவுகளை பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

7 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பகிர்வு நண்பா.

sakthi said...

நல்ல தகவல் பதிவு அண்ணா
அன்புடன்,
கோவை சக்தி

Kumaresan Rajendran said...

வாழ்த்துக்கள் நண்பரே,

இன்று என்னுடைய வலைப்பூவில் ஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க

வேலன். said...

guna thamizh said...
பயனுள்ள பகிர்வு நண்பா.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
நல்ல தகவல் பதிவு அண்ணா
அன்புடன்,
கோவை சக்திஃஃ

நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

இரா.குமரேசன் said...
வாழ்த்துக்கள் நண்பரே,

இன்று என்னுடைய வலைப்பூவில் ஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்கஃஃ

நன்றி குமரேசன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Christopher Stradley said...

வாழ்த்துக்கள் நண்பரே, இன்று என்னுடைய வலைப்பூவில் ஜிமெயிலின் அரட்டை பெட்டியினை நீக்க

Related Posts Plugin for WordPress, Blogger...