வேலன்:-புகைப்படங்களை பிடிஎப் பைலாக மாற்றிட -All Images To PDF.

கணினியில் உள்ள புகைபப்டங்களை தனிப்படமாகவோ -போல்டரில் உள்ள மொத்த புகைப்படங்களையோ நாம் பிடிஎப் பைலாக மாற்றிட இந்த சாப்ட்:வேர் பயன்படுகின்ற:து:. 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 இப்போது உங்களுககான புதிய விண்டோ திறக்கும். இதில் தனிப்புகைப்படமோ அல்லது போல்டரில் உள் ள  மொத்த புகைப்படங்களோ என எது தேவையோ அதனை தேர்வு செய்திடவும்.
 நீங்கள் தேர்வு செய்வதற்கு ஏதுவாக நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
 ப்ரிவியூ பார்பதற்கு விண்டோ கொடுத்துள்ளார்கள். புகைப்படத்தில் தேவையில்லாததை நீக்குவதற்கும் மேல் கீழே இடது வலது புறம் திருப்புவதற்கும் இதில் வசதி கொடுத்துள்ளார்கள்.
 நீங்கள் போல்ரில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் தேர்வு செய்திட செலக்ட் போல்டரி ஆப்ஷனை கிளிக் செய்திடவும்.
 புகைப்படங்கள் ;ஒவொன்றாக தேர்வாகும். உங்களுக்கு சிறிய விண்டோ தோன்றி அதில் தேர்வான புகைப்படங்கள் ப்ரிவியூ தெரியும்.
 புகைப்படங்களை நீககுவதற்கும் மேலே கீழே மாற்றுவதற்கும் அப் அன்ட் டவுண் ஆப்ஷன்கள் கொடுத்துள்ளாரகள்.
தேவையான மாற்றங்கள் கிராப் செய்திட்ட புகைப்படங்களை இறுதியாக நீங்கள் பிடிஎப் பைலாக மாற்றிகொள்ளலாம். மாற்றிய இடத்தில் சென்று பாரத்தால் உங்களுக்கான புகைப்படம் பிடிஎப் பைலாக கிடைக்கும்.
பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...