வேலன்:-போல்டரின் நிறம் மாற்ற -Folder Painter.

கணினியில் பயன்படுத்தும் போல்டர்களில் நாம் அதுசம்பந்தமாக பெயர் வைத்திருப்போம். ஆனால் அந்த போல்டருக்கு நாம் விதவிதமான நிறங்கள் கொடுத்துவிட்டால் தேடுவதற்கு சுலபமாக இருக்கும்.  700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நீங்கள் உங்கள் போல்டரை ரைட் கிளிக் செய்திட வரும் பாப்அப் விண்டோவில் Change Folder Icon என்பதனை கிளிக் செய்திடவும் வலதுபுறம் மேலும் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் உங்களுக்கு தேவையான நிறத்தினை நீங்கள் தேர்வு செய்திட போல்டரில் அந்த நிறம் மாறிவிடும். உதாரணமாக நீங்கள் புகைப்படங்களை ஒரு போல்டரில் வைத்திருந்தால்அந்த புகைப்பட போல்டருக்கு நீலநிறம் கொடுத:துவிடலாம்.
ஒரு டிரைவில் உள்ள புகைபப்டங்களின் போல்டர்கள் எல்லாம் நீலநிறம் என அடையாளம் கண்டு சுலபமாக நாம் தேடி எடுக்கலாம்.இதுபோல ஒவ்வொரு நிகழ்விற்கும் வேண்டிய நிறத்தினை போல்டருக்கு கொடுத்து வேலைகளை சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...