வேலன்:-அனிமேஷன்படங்களில் உள்ள படங்களை தனிதனி படங்களாக பிரிக்க -Split Animation-Ezgif.com

அசைவுப்படங்கள் எனப்படும் gif படங்களை பார்த்திருப்பீர்கள். பல படங்களின் மொத்த தொகுப்பே உங்களுக்கு ஒரே அசைப்படமாக தெரியும். நாம் பார்க்கும் அசைவுப்படங்களுக்குள் நிறைய படங்கள் இருக்கும். அவ்வாறு நாம் காணும் அசைவுப்படங்களில் உள்ள படங்களை பிரித்து பார்வையிட இந்த இணையதளம் பயன்படுகின்றது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட இணையபக்கம் திறக்கும்.


 அதில ;நம்கணினியில உள்ள அனிமேஷன் எனப்படும் அசைவுப்படத்தினையோ இணையத்தில் உள்ள அசைவுப்படத்தினையோ தேர்வு செய்திடவும்.நான் பறக்கும் கழுகுபடத்தினை தேர்வு செய்துள்ளேன்.
 இப்போது வரும் விண்டோவில் கீழே உள்ள ஸ்பிலிட் என்கின்ற ஆப்ஷனை தேர்வு செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் அசைவு படத்தில் -அனிமேஷன் படத்தில் எத்தனை ப்ரேம்கள் பயன்படுத்தினார்களோ அநத்தனை ப்ரேம்களும் உங்களுக்கு தெரியவரும்.
இதன் மூலம் நீங்கள் உங்களுக்கான அனிமேஷன்படங்களை தனிதனி படங்களாக பிரித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...