வேலன்:-பிரிண்ட் செய்கையில் இங்க்கினை மிச்சப்படுத்த -Clever Print.-abelssoft

பிரிண்ட் செய்கையில் அதிகஅளவு பேப்பரையும்.இங்க்கையும் மிச்சப்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.இந்த இணையதளம் சென்று இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்திட  இங்கு கிளிக் செய்யவும்;இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய கணிணியில் வந்து அமர்ந்துகொள்ளும். பின்னர் உங்களுக்கு தேவையான பிரிண்ட் பணியை துவங்குங்கள். பிரிண்ட் கட்டளை கொடுத்ததும் பிரிண்டர் என்பதில் இந்த சாப்ட்வேரான CleverPrint என்பதனை தேர்வு செய்யவும். பின் பிரிண்ட் கட்டளை கொடுக்கவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 பிரிண்ட்டின் முதல் பக்கம் முகப்பு திரையிலும் பக்கத்தில் பிரிண்ட் செய்யவுண்டிய பக்கங்களும் கிடைக்கும். தேவையான பக்கத்தினை தேர்வு செய்திடலாம். மேலும் இதன் மேல்புறத்தில் நிறைய ஆப்ஷன்கள் அடங்கிய டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
 இதில் முதல் டேப்பினை கிளிக் செய்திட  ப்ரிவியு கிடைக்கும். அடுத்துள்ள டேப்பில் கிளிக் செய்திட பிரிண்ட் பேப்பரை நீள அகலமாக மாற்றிக்கொள்ளலாம். அடுத்துள்ள டேபினை கிளிக் செய்திட பிரிண்ட்பேப்பரில் படங்களும் எழுத்துக்களையும் நாம் வாட்டர் மார்க்காக கொண்டவரலாம்.

 அதுபோல பிரிண்ட்டரின் பக்கங்களை நாம் பிடிஎப் பைலாக மாற்றிக்கொள்ளலாம்.தேவையான இடத்தில் நாம் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.
இதுபோல இதுவரை நாம் பிரிண்ட் செய்த முந்தைய டாக்குமெண்ட்களையும் நாம் பார்வையிடலாம். அதுபோல இடதுபுறம் உள்ள டேபில் நிறைய டேப்புகள்கொடுத்துள்ளார்கள்.

 இதில் முதலில் உள்ள டேபினை கிளிக் செய்திட பேப்பரினை 1,2,4,8 என்கின்ற பக்கங்களில் பிரிவியூ பார்க்கலாம். மேலும் டாக்குமெண்ட்டில் உள்ள வாட்டர்மார்க்கையும் நீக்கிவிடலாம்.டாக்குமெண்டில் விரும்பிய மார்ஜின் பார்டர்கொண்டுவரலாம்.பார்க்கும் டாக்குமெண்ட்டை பிரிண்ட் எடுக்கலாம்.பிரிண்ட்டரில் இங்க் சேமிக்கும் ஆப்ஷனை கிளிக் செய்திட குறைவான இங்க்கில் நமக்கு பிரிண்ட்டான பேப்பர் கிடைக்கும்.பயனபடுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...